ஆடி மாதம் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளின் மகிமை.

By Sakthi Raj Jul 19, 2024 05:30 AM GMT
Report

ஆடி மாதமே ஒரு சிறப்பான மாதம்.அதிலும் ஆடி வெள்ளிக்கிழமை இன்னும் சிறப்பு வாய்ந்தது.ஆடி வெள்ளிக்கிழமையில் நாம் தெய்வங்களை வழிபடவேண்டும்.அந்த நாட்களில் சிறப்பு என்னவென்று பார்ப்போம்.

ஆடி மாதம் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளின் மகிமை. | Aadi Matham Friday Vazhipadu Sirapugal

முதல் வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை சுவர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சுவர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே ஆடி மாத முதல் வெள்ளியின் போது, சுவர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.

இரண்டாம் வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் மற்றொரு வடிவம் தான் அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளியின் போது அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக் கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

மூன்றாம் வெள்ளிக்கிழமை

ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். எனவே காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின் போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

ஆடி மாதமும் மஞ்சளின் மகிமையும்

ஆடி மாதமும் மஞ்சளின் மகிமையும்


நான்காம் வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தின்நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின் ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின் போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும், திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ஐந்தாம் வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. இந்த கடைசி வெள்ளிக்கிழமையின் போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். இந்த பூஜை திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US