விபத்தில் இருந்து நம்மை காக்கும் கருட பஞ்சமி வழிபாடு
ஆடி மாதம் முக்கியமான விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே கருட பஞ்சமி ஆகும்.கருட பஞ்சமி என்பது பெருமாளின் வாகனமான கருடனுக்கு உகந்த தினம் ஆகும்.
அன்றைய தினத்தில் பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.
மேலும்,வாழ்க்கையில் பல சங்கடங்களால் சிக்கி தவிக்கும் நம் மீது கருடனின் பார்வை நம் மீது பட்டால் போதும் பாதி பாவங்கள் விலகி விடும்.
அந்த அளவுக்கு சக்திகளை மகாவிஷ்ணு கருடனுக்கு கொடுத்துள்ளார். பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருட சேவை தான் மிக விசேஷமானது.
அதனால்தான் கருடனுக்கு ஆழ்வார் என்ற சிறப்பு பெயரும் சேர்த்து கருடாழ்வார் என்றும் அழைக்கப்படுகிறார். பலன்கள் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக சிறு சிறு தோஷம் இருக்கும்.
அப்படியாக ஒரு சிலருக்கு ராகு கேது தோஷங்கள் இருக்கும்.பொதுவாகவே ராகு கேது தோஷம் இருப்பவர்கள் கண்களுக்கு மட்டும் தான் நாகங்கள் தென்படும் என கூறுவார்கள்.
கார்க்கோடகன் என்ற நாகத்தை அடக்கி பிடித்து நாகங்களை ஆபரணமாக கருடன் வைத்துக் கொண்டதால் ராகு கேது தோஷங்கள் உள்ளவர்கள் கருட பஞ்சமி வழிபாடை மேற்கொள்வதன் மூலம் தோஷங்கள் அகலும் என நம்பப்படுகிறது.
மேலும் சிலருக்கு ஜாதகத்தில் நாக தோஷம் தீவிரமாக இருக்கும்.அவர்கள் நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து கருட பஞ்சமி அன்று விரதத்தை முடிக்க வேண்டும்.
இதன் மூலம் அனைத்து வித சர்ப்ப தோஷங்களும் பரிபூரணமாக விலகும் என்பது ஐதீகமாக உள்ளது. ஒருவர் கருட பஞ்சமி அன்று கருடனை வழிபடுவதன் மூலம் விஷ சந்துக்களால் ஏற்படும் தீங்குகளில் இருந்தும், வாகன விபத்துகளில் இருந்தும் கருட பகவான் நம்மை பாதுகாத்து அருள்வார் என்பது நம்பிக்கை.
எல்லாம் பெருமாள் கோயில்களிலும் கருட பஞ்சமி அன்று கருடபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அன்றைய தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவானுக்கு துளசி மாலை சாற்றி அர்ச்சனையுடன் கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து அதை அனைவருக்கும் தானமாக கொடுக்க வேண்டும்.
மேலும் சிறப்பு வழிபாடாக உங்கள் வாகனங்களின் சாவியை இறைவன் காலடியில் சமர்ப்பித்து பூஜை செய்து வாங்கிக் கொள்ளலாம்.
ஆக கருட பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர்.அவரை வழிபட தோஷங்கள் விலகி நம்மை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பார் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |