ஆடி மாதத்தில் நாகருக்கு சர்ப்ப வழிபாடு செய்வது ஏன்?
ஆடி மாதம் என்றாலே எல்லா கோயில்களிலும் ஆன்மீக நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெறும்.அப்படி இருக்க அந்த மாதத்தில் நாக சர்பத்திற்கும் பல விஷேசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது.
நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள்.
இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை. முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை காரணம் என்று சொல்லுவதுண்டு.
ஆனால் அதை பெரும்பாலும் நம்பத்தகாதவாறு இருந்தாலும் சமயங்களில் நம்முடைய தேவை இல்லாத துன்பங்கள் நம்மை சிந்திக்கவைக்கும்.
அதாவது ஒருவர் புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் பல கெடுதல்களில் இருந்து தப்பிக்கலாம் என்றும்,பாவம் செய்து இருந்தால் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் பல ஜோதிடர்கள் செல்வதுண்டு.
அப்படியாக இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் உடல் குறைபாடு கொண்டவர்களாகவும்,நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை சந்திக்க கூடும்.
இப்படி வாழ்க்கையில் இன்னல்களை சந்திப்பவர்கள் நாக வழிபாடு செய்ய அதனுடைய தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை, அதாவது நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.
மேலும்,பிரதோஷ நாட்களில் மௌன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி தினங்களில் விரதமிருந்து வழிபடுவதால் சகலவிதமான செல்வங்களையும் பெறலாம்.
புற்றுக்கோயிலுக்குச் சென்று புற்றுக்கு பால், முட்டை வைத்து வழிபாடு செய்தல் மஞ்சளையும், கங்குமத்தையும் புற்றுக்குத் தூவி ஆத்மார்த்தமாக பிராத்தனை செய்தல், புற்று இல்லாமல், நாகர் சிலை உள்ள கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம்.
வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |