ஆடி மாதம் அம்பாள் வழிபாடு ஏன்?
ஆடி மாதம் பிறந்துவிட்டது.ஆடி மாதம் என்றால் அம்பாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவரும் தெரிந்தது.அப்படி இருக்க ஆடி மாதம் ஏன் அம்பாளுக்கு உகந்த மாதம் என்று பலரும் அறிந்திடாத ஒன்று.
நாம் ஏன் ஆடி மாதத்தில் அம்பாள் வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் சென்றான்.அப்பொழுது பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள்.
அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்த அரக்கன் , பாம்பு வடிவம் எடுத்து உள்ளே புகுந்தான். பிறகு சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதி தேவியாக உருமாறினான் அந்த அரக்கன்.
நடப்பவை எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார்.
அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள்.
அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே "ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்என்பது புராணம் .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |