இன்று ஆடி முதல் வெள்ளி மற்றும் பிரதோஷம் வழிபாடு
ஆடி மாதத்தில் என்றாலே ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாள் தான்.அப்படி இருக்க இது ஆடி மாதத்தில் வரும் முதல் பிரதோஷம் என்பதால் கூடுதல் சிறப்புகள் நிறைந்த நாளாக இருக்கிறது.
பொதுவாக பிரதோஷம் என்றால் பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழிபாடாகும். பிரதோஷ காலம் அன்று தான் சிவபெருமான், விஷத்தைக் குடித்து உலகத்தை காத்தருளினார்.
ஆதலால் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும். முக்தி கிடைக்கும்.
மேலும்,ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் வரும் திரயோதசி திதி எனும் 13ம் நாள் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதோஷ நாளன்று யார் ஒருவர் விரதமிருந்து, பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு, நந்தி, சிவபெருமானை தரிசித்து வழிபட்டு, தன் விரதத்தை முடிக்கிறாரோ அவரின் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும் என்பது நம்பிக்கை.
ஓம் சிவாய நமக
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |