ஆடி பெருக்கு அன்று நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை

By Sakthi Raj Jul 31, 2024 08:30 AM GMT
Report

ஆடி பெருக்கு என்பது ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.

அப்படியாக இந்த வருடத்தின்(2024) ஆடிப்பெருக்கு சனிக்கிழமை வருகிறது. அதாவது ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வருகிறது.

அந்த நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.

ஆடி பெருக்கு அன்று நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை | Aadi Perukku Aadi Matham Parigaram

எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு அதன் பிறகு பூஜையை துவங்குவது வெற்றியைத் தரும்.

பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் பற்றி தெரியுமா?

சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் பற்றி தெரியுமா?


பெண்கள் ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது.

அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம்.

புதிதாக சரடு அணிபவர்களும் இந்நாளில் சரடு மாற்றிக் கொள்ளலாம். காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை நல்ல நேரமாக இருக்கிறது.

இந்த நேரத்திற்குள் நீங்கள் தாலி கயிற்றை மாற்றி விட வேண்டும். நல்ல நேரம் பார்க்காமல் கயிறு மாற்றக்கூடாது.

ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் 3பேர் அல்லது 5 பேருக்கு மங்கல பொருட்களை தானம் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது.

தாம்பூலத்தோடு மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் கொடுத்தால் மாங்கல்ய பலம் நீடிப்பதோடு மட்டுமல்லாமல், குல விருத்தியும் உண்டாகும் என்பது ஐதீகம்.

ஆடி பெருக்கு அன்று நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை | Aadi Perukku Aadi Matham Parigaram

ஆடிப்பெருக்கு அன்று வீட்டில் நிறைவாக இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் இருக்கிறது. அவை அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வற்றல், எண்ணெய் ஆகியவற்றை வாங்கி நிரப்பி வைக்க மறக்க வேண்டாம்.

கடைசியாக ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டிய முக்கியமான ஒரு பொருள் குண்டு மஞ்சள் ஆகும்.

அதிக வசதி படைத்தவர்கள் அன்றைய நாள் பொன்னும், பொருளும் வாங்கி குவிப்பார்கள்.

ஆடிப்பெருக்கில் வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை எனவே நகைக்கடைகளில் அன்றைய நாள் கூட்டம் அலைமோதும்.

நம்மால் அவற்றை வாங்க முடியாவிட்டாலும் குண்டு மஞ்சளை வாங்கி வைப்பது அதற்கு இணையான பலன்களை கொடுக்கும் என்ரு சாஸ்திரம் கூறுகின்றது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US