ஆடித்திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
மதுரை மாவட்டத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது.
இந்தகோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடிப்பெருந்திருவிழா ஆகிய திருவிழாக்கள் முக்கியமானவை.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகராகிய சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காலையில் புறப்பட்ட தேர், மதியம் நிலையை அடைந்தது நிலையில் ஏராளமான பக்தர்கள் சந்தனக்குடங்கள் எடுத்து வந்து 18ஆம் படி கருப்பணசாமி கோவிலில் சாத்துபடி செய்து தரிசனம் செய்து பொங்கலிட்டு வழிபட்டனர்.
இன்று இரவில் புஷ்ப சப்பரத்தில் அழகர் வீதி உலா வருகிறார். மேலும், நாளை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







