கேட்ட வரம் உடனே அருளும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு
ஆடிப்பூரம் அன்று தான் ஆண்டாள் அவதரித்த நாள். இந்நாளில் ஆண்டாள் - ரங்கநாதரை வணங்குவது வாழ்க்கையில் பல வித மாற்றங்களை உருவாக்கும்.
ஆடி மாதம் பிறந்ததில் இருந்து அந்த மாதம் முழுவதும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என சிறப்பு பண்டிகைகள் அடுத்து அடுத்த கொண்டாடப்படும்.
27 நட்சத்திரங்களில் பூரம் நட்சத்திரத்தில் வைணவ சாஸ்திரப்படி 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பிறந்த தினமாகவும் ஆடி பூரம் கவனிக்கப்படுகிறது.
இந்த நாளே ஆண்டாள் அவதரித்த நாளாகவும் ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் ஜெயந்தி என அழைக்கப்படும் ஆடிப்பூரம்,லட்சுமியின் தேவியின் அவதாரமான ஆண்டாளுக்காக அர்பணிக்கப்பட்டது.
பெரியாழ்வாரின் கண்டிப்பு: இதிகாசங்களின்படி, பெரியாழ்வார் ஆழ்வார் என்பவர் ஒரு துறவி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வருகின்றார்.
துறவியாக இருப்பினும் குழந்தை இல்லாத துன்பத்தை தீர்க்க விஷ்ணுவிடம் அவர் வேண்டிய நிலையில், கோவில் வழியே நடந்து சென்றபோது தோட்டத்தில் கண்டெடுத்த குழந்தைக்கு கோதை என பெயரிட்டு வைணவ மரபில் வளர்த்தார்.
ஒருகட்டத்தில் ஆண்டாளுக்கு ரெங்கநாதர் மீது பக்தி அளவுகடந்து செல்ல, அர்ச்சனை செய்யும் முன்னே அவருக்கு வைத்திருந்த மாலையை ஆண்டாள் தான் அணிந்து ரெங்கனை நினைத்தபடி இருக்க, ஒருநாள் பெரியாழ்வாரின் அதை பார்க்க ஆண்டாள் பெரியாழ்வார் கண்டிப்புக்கு ஆளாகினர் ஆண்டாள்.
ஆண்டாள் - ரங்கநாதர் திருமணம்: பின் ஒருநாள் இரவில் பெரியாழ்வாரின் உறக்கத்தில் விஷ்ணு தோன்றி ஆண்டாள் அணிவித்தபின் மாலையை அணிவிக்க கூறியுள்ளார்.
ஆண்டாளும் தனது தந்தையிடம் ரங்கநாதரைத் தவிர வேறொரு நபரை திருமணம் செய்யமாட்டேன் என கூறிவிட, தனது பக்தையை விஷ்ணு கோவில் கருவறையில் கரம்பிடித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பிக்கப்படும் ஆடி பூரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 10 நாட்களாக கொண்டாடப்படும் திருவிழாவில், 10 ம் நாள் ஆண்டாள் - ரங்கநாதர் திருமணம் நடைபெறும்.
குழந்தை பாக்கியம் அருளும்
ஆடி பூரம் அன்று திருமணத்திற்கு வரன் தேடும் நபர்கள் 10 வது நாள் பூஜையில் கலந்துகொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேலும் அவர்கள் ஆண்டாளுக்கு உரிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடல்களை மனதார பாடி பிரார்த்தனை செய்யலாம்.
அதேபோல, பல கோவில்களிலும் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் வழங்கப்படும்.
இதனை அணிந்துகொண்டால் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளிற்கு தீய சக்திகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும்.
நல்லநேரம்
மேலும் ஆண்டாளை வழிபட ஆண்டாளின் திருநாமத்தைபோற்றி, பக்தர்கள் பூஜை செய்ய நல்ல நேரமாக காலை 09:15 முதல் 10:30 மணிவரையிலும், மாலை 04:45 முதல் 07:29 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் பூஜை செய்து வழிபடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |