வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றலாமா?சாஸ்திரம் சொல்வது என்ன?
இந்து மதசாஸ்திரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.அதிலும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியங்கள் தடையின்றி இறைவனின் அருளால் நடந்தேறும் என்பது ஆன்மீகத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அப்படியாக விளக்கு ஏற்றுதல் என்பது காலம் காலமாக பெண்கள் செய்து வரும் ஒரு வழக்கம் ஆகும்.மேலும்,நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் வந்திருக்கும் ஏன் ஆண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடாத என்று?அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக வீடுகளில் அதிகாலை எழுந்து யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டாலே போதும் மஹாலக்ஷ்மி தயார் நம்வீட்டில் நிரந்தரமாக தங்கி விடுவாள்.இதற்கு முக்கிய காரணம் இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்களாம்.
அதோடு அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் லட்சுமி தேவி வலம் வருவதாக ஐதீகம்.அந்த நேரத்தில் நாம் உறங்கிக்கொண்டு இல்லாமல் எழுந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் தயார் நம்வீட்டிற்கு வருகை தந்து நமக்கு அருள் புரிவாள்.
மேலும்,நாம் அதிகாலை எழுந்து முதலில் நம்முடைய வாசற்கதவை திறக்கவேண்டும்.அவ்வாறு திறக்கும் பொழுது "மகாலஷ்மியே வருக" என்று 3 முறை சொல்லிவிட்டு திறந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.
அதே சமயம் நாம் தினம் குளிக்கும் பொழுது குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள் கலந்து குளித்து வர விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.மேலும்,நம் வீட்டை சுற்றி துர்சக்திகள் விலக செவ்வாய்,வெள்ளிக்கிழமை ஒரு சொம்பு தண்ணீரில் மஞ்சள் கலந்து அதை வீடு முழுவதும் தெளித்து வர எப்பேர்ப்பட்ட எதிர்மறை சக்திகள் சூழ்ந்து இருந்தாலும் விலகி விடும்.
அதே போல்,பெண்கள் ஏதேனும் காரணத்தால் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யமுடியாமல் போக ஆண்கள் விளக்கு ஏற்றலாமா?என்று கேட்டால் ஆண்களும் கட்டாயம் விளக்கு ஏற்றலாம்.அதுவும் காலையில், சூரியன் உதிப்பதற்குள், மாலையில் சூரியன் மறைவதற்குள் விளக்கை ஏற்றலாம் என்கிறார்கள் பெரியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |