இன்று ஆனி திருமஞ்சன நாளில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்கள்
சிவபெருமானின் ஒரு அம்சமாக இருக்கக்கூடியவர் தான் நடராஜப் பெருமான். இவருக்கு ஒரு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறும். அவ்வாறு நடக்கும் 6 முறை அபிஷேகத்தில் இரண்டு நாள் மட்டுமே விடியற்காலையில் நடைப்பெறும்.
அப்படி விடியற்காலையில் நடக்கக்கூடிய அபிஷேகங்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஆனி மாத வளர்பிறையில் வரக்கூடிய உத்திர நட்சத்திர நாள். அன்றைய நாளைத்தான் நாம் ஆனி திருமஞ்சனம் என்று கூறுகிறோம்.
அன்றைய நாளில் நாம் நடராஜப்பெருமானை வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் எல்லாம் விலகும். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் ஜூலை 2, 2025 அன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், அன்றைய தினம் நாம் சிவபெருமானின் அருளைப்பெற வாங்கவேண்டிய முக்கியமான பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
இந்த உலகத்தில் எவர் ஒருவர் சிவபெருமானின் அருளைப்பெறுகிறாரோ அவர்கள் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள். அதாவது சிவன் ஆட்கொண்டு விட்டால் அந்த நபரின் கர்ம வினைகள் எல்லாம் விலகி அவன் ஆன்மா தூய்மை அடைகிறது.
மேலும், இவரை வழிபாடு செய்தால் நமக்கு பிறவா வரம் அளித்து அருள் புரிகிறார். இவ்வளவு அற்புத சக்திகள் நிறைந்த சிவபெருமானின் அருளைப்பெற அவருக்கு உரிய சில பொருட்களை ஆனி திருமஞ்சன நாளில் வாங்கி வழிபாடு செய்தால் நாம் மிக சிறந்த பலன் பெறலாம் என்கிறார்கள்.
அதில் முக்கியமாக திகழ்வது சிவபெருமானுக்குரிய ருத்ராட்சம். இந்த ருத்ராட்சத்தில் ஐந்து முக ருத்ராட்சம் என்பது பொதுவான ருத்ராட்சமாக கருதப்படுகிறது. அப்படியாக, இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை வாங்கி நம்முடைய கழுத்தில் அணிகின்றோமோ இல்லையோ அதை நம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது நமக்கு மிக சிறந்த பலன் கொடுக்கிறது.
அதேப்போல் நடராஜருக்கு அணிவிக்கக்கூடிய மாலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் வெட்டி வேர் மாலை. அதனால் வெட்டி வேர் கொண்டு செய்யப்பட்ட ஏதேனும் தெய்வ உருவத்தை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். அடுத்ததாக இருக்கக்கூடிய முக்கியமான பொருட்களில் ஒன்று தாமரை மலர். தாமரை மலரில் இருந்து கிடைக்கக்கூடியதே தான் தாமரை விதை.
இந்த தாமரை விதையை வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி கடாட்சத்தை நம்மால் பெற முடியும். ஆக மேற்க்கண்ட பொருட்களை நாம் நடராஜருக்கு உரிய நாளான ஆனி திருமஞ்சன நாளில் வாங்கி வழிபாடு செய்வதால் மனதில் நேர்மறையான சிந்தனையும் மனதில் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |