கண் திருஷ்டி விலக 12 ராசிகளும் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
கண் திருஷ்டி என்பது உண்மை தான். நம்மை சுற்றி பலரும் திருஷ்டியால் பாதிக்கப்படுவதை நாம் பார்த்திருப்போம். கண் திருஷ்டியானது ஒருவர் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படியாக, கண் திருஷ்டி விலக 12 ராசிகளும் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரங்கள் பற்றிப் பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் கண் திருஷ்டி விலக 5 காய்ந்த மிளகாய் எடுத்துக்கொண்டு 7 முறை தலையை சுற்றி கற்பூரத்தில் போட்டு எரித்து விடவேண்டும்.
ரிஷபம்:
இவர்களின் கண் திருஷ்டி விலக 5 கிராம்பை எடுத்துக்கொண்டு 7 முறை தலையை சுற்றி வீட்டிற்கு வெளியே போட்டு விடவேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் கண் திருஷ்டி விலக சிறிது வேப்பிலை எடுத்துக்கொண்டு 7 முறை தலையை சுற்றி பிறகு அதை ஒரு மண் சட்டி அல்லது மண் பாத்திரத்தில் வைத்து எரித்து விட வேண்டும்.
கடகம்:
இந்த ராசியினர் அடிக்கடி கண் திருஷ்டியால் பாதிக்கக்கூடிய தன்மை கொண்டவர்கள். ஆதலால் இவர்கள் தினமும் குளிக்கும் பொழுது சிறிது கல் உப்பை தண்ணீரில் போட்டு குளித்து வந்தால் பிரச்சனைகள் விலகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் கண் திருஷ்டி விலக 2கிராம்பு 2 காய்ந்த மிளகாய் எடுத்துக்கொண்டு அதை இடப்புறத்தில் இருந்து வலது புறமாக 7 முறை தலையை சுற்றி கற்பூரத்தில் போட்டு எரித்து விடவேண்டும்.
கன்னி:
இவர்களின் கண் திருஷ்டி விலக செவ்வாய்கிழமையில் ஹனுமன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் கண் திருஷ்டி விலக திருஷ்டி கயிறுகள் கையில் எப்பொழுதும் கட்டிக் கொள்ளலாம். அதோடு அந்த கயிறை அவர்கள் பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் கைகளில் காட்டிக்கொள்வது நல்லது.
விருச்சிகம்:
இவர்களின் கண் திருஷ்டி விலக தேங்காய் அல்லது இளநீர் எடுத்துக்கொண்டு அதை 7 முறை தலையை சுற்றி ஓடும் ஆறு அல்லது நீர்நிலைகளில் போட்டு விடவேண்டும்.
தனுசு:
இவர்களின் கண் திருஷ்டி விலக மாதம் ஒரு முறை அல்லது 6 மாதம் ஒரு முறை புனித நீர்களில் நீராடலாம்.
மகரம்:
இவர்களின் கண் திருஷ்டி விலக இடது காலில் கருப்பு கயிறு காட்டிக்கொள்வது சிறந்த பலன் அளிக்கும் என்கிறார்கள்.
கும்பம்:
இவர்களின் கண் திருஷ்டி விலக கைப்பை அல்லது சட்டைப்பையில் எலுமிச்சை பழத்தை காலை முதல் மாலை வரை வைத்துக்கொண்டு பிறகு அதை கண்ணுக்கு தெரியாத இடத்தில் போட்டு விடவேண்டும்.
மீனம்:
இவர்களின் கண் திருஷ்டி விலக புனித நீரான கங்கை நீர் போன்ற தீர்த்தங்களில் நீராடுவது நல்ல பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |