இன்று ஆவணி மாத அமாவாசை.., சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம்
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சித்தர்களின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், பக்தர்கள் மலையில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |







