இன்றைய ராசி பலன்(23-08-2025)

Report

 மேஷம்:

இன்று தொழில் வாழ்க்கையை பற்றிய முக்கிய ஆலோசனையை செய்வீர்கள். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளால் சண்டைகள் நடக்கும். இன்று பிறரிடம் உங்கள் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்:

உங்கள் நட்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். வீடுகளில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களை சரி செய்வீர்கள். விட்டு சென்ற சொந்தங்கள் உங்களை மீண்டும் வந்து சேர்வார்கள். நன்மையான நாள்.

மிதுனம்:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத சண்டைகள் உருவாகும் நாள். விருந்தினர் வருகையால் உங்கள் வீடுகளில் மகிழ்ச்சி உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நன்மை அளிக்கும்.

கடகம்:

உங்கள் மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவை கொடுப்பார். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய ஆலோசனை செய்வீர்கள். அத்தை வழி உறவால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி செல்லும்.

சிம்மம்:

இன்று உங்கள் மனம் சில நல்ல விஷயத்தை எதிர்பார்த்து காத்திருக்கும். காதல் வாழ்க்கை நல்ல முறையில் செல்லும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கன்னி:

இன்று உங்கள் குடும்பத்தின் முக்கிய முடிவுகளை நீங்கள் யோசித்து எடுக்கும் நிலை உருவாகும். ஆனால் மனம் ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து போராடி கொண்டு இருக்கும். மதியம் மேல் நல்ல முடிவை சந்திப்பீர்கள்.

இந்த 3 ராசிகளில் பிறந்த பெண்களை யாராலும் அசைக்கமுடியாதாம்

இந்த 3 ராசிகளில் பிறந்த பெண்களை யாராலும் அசைக்கமுடியாதாம்

துலாம்:

இன்று உங்களின் மதிப்பு உயரும் நாள். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்துக் கொள்ளும் நாள். உங்களை வைத்து சிலர் அவர்கள் வேலை பளுவை முடித்து கொள்வார்கள். கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

இன்று குடும்பத்தின் மீது கோபம் குறையும். தேவை இல்லாத வீண் செலவுகள் உருவாகும். உடல் சோர்வு சிலருக்கு உண்டாகும். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் உருவாகலாம்.

தனுசு:

குடும்பத்தில் உங்கள் கருத்தை சிலர் புரிந்து கொள்வார்கள். ஒரு சிலருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். சற்று பொறுமையாக நடந்து கொண்டால் எளிதாக நினைத்ததை சாதிக்கலாம்.

மகரம்:

நிதி நிலைமை குறித்து குடும்பத்தில் சில விவாதங்கள் ஏற்படலாம். கூடுதல் பொறுப்பு கிடைக்கலாம். இன்று நீங்கள் பண விஷயத்தில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

கும்பம்:

உங்கள் வீடுகளில் உங்களுக்கு எதிராக சிலர் கருத்துக்களை தெரிவிப்பார்கள். வருங்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனையும் கவலையும் அதிகரிக்கும். வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள வேண்டாம்.

மீனம்:

உங்கள் பிள்ளைகள் பற்றி பெருமை அடைவீர்கள். உங்கள் மனதில் உள்ள பாரம் குறையும். சொந்தங்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். நம்பிக்கையும் சந்தோஷமும் பிறக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US