ஆவணி மாதத்தில் இத்தனை சிறப்புகள் இருக்கின்றதா?
தமிழ் மாதம் 12 மாதங்களும் ஒவ்வொரு தனிச் சிறப்புகளை கொண்டது. அப்படியாக தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் பல விசேஷங்கள் கொண்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.
1. சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது இந்த ஆவணி மாதத்தில் தான். இந்த நேரத்தில் சூரியன் சிம்ம ராசியில் மிகவும் வலுவான நிலையில் இருப்பார். அதனால் இந்த காலகட்டத்தில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறந்த முடிவையும் பலனையும் பெற்றுக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
2. கேரளாவில் இந்த மாதம் தான் முதல் மாதமாகவும் சிம்ம மாதகமாகவும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் .
3. ஆவணி மாதத்தில் தான் சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கிய தினங்கள் வருகின்றது. அதனால் இந்த மாதத்தில் செய்யப்படும் அனைத்து விஷயங்களும் வழிபாடுகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
4. ஆவணி மாதம் சிவ பெருமான் வழிபாட்டிற்குரிய ஒரு முக்கியமான மாதமாகும். அதாவது பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து கடையும் பொழுது அதனுடைய அழுத்தம் தாங்காமல் வாசுகி என்னும் நாகம் ஆலகாலம் எனும் கொடிய விஷத்தை கக்கியது.
இதனால் தேவர்கள் அனைவரும் பயந்திட, கருணை உள்ளம் கொண்ட சிவபெருமான் வாசுகி இடமிருந்து வெளிவந்த விஷத்தை தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஏற்றுக் கொண்டு உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றுகிறார்.
இதைப் பார்த்த பார்வதி தேவி தன்னுடைய ஈசனுக்கு எந்த ஒரு துன்பமும் நேராமல் இருக்க சிவபெருமானுடைய தொண்டையை பற்றி கொண்டு அவரை நீலகண்டனாக ஆக்குகிறார். சிவபெருமானுடைய உடல் உஷ்ணத்தால் மாறாமல் இருக்க அவருக்கு கங்கை நீரை கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள் சிவபெருமானுடைய தலைகளை கங்கை மற்றும் சந்திரனை அமரச் செய்து அவருக்கு குளிர்ச்சியை உருவாக்குகிறார்கள்.
இவ்வளவு அற்புதமான நிகழ்வுகள் நடந்தது இந்த ஆவணி மாதத்தில் தான். அதனால் நம்முடைய துன்பங்கள் நீங்க ஆவணி மாதத்தில்சிவபெருமானை வழிபடுவது மிகச்சிறந்த பலனையும் நம் வாழ்க்கையில் மாற்றத்தையும் கொடுக்கிறது என்கிறார்கள்.
5. பொதுவாக கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. ஆடி கழிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று. இதற்கு காரணம் ஆடி மாதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் செய்ய மாட்டார்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகளை அவர்கள் ஆவணி பிறந்ததும் செய்வார்கள். மேலும் ஆவணி மாதங்களில் அனைத்து நாளுமே மங்களகரமான நாட்களை ஆகும்.
6. ஆவணி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளி, சனி போன்ற நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வதற்கான மிக முக்கிய நாட்களாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக புதிதாக திருமணமான பெண்கள் தங்களுடைய இல்வாழ்க்கை சிறக்க ஆவணி மாதத்தில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கௌரி விரதம் இருப்பார்கள்.
அதேபோல் ஆண்களும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் நினைத்த காரியம் நினைத்தது போல் நிறைவேறும்
7. ஆவணி சோமவார விரதம் மிக முக்கியமான விர தமாக சைவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. அதிலும் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் அவர்கள் வழிபாடு செய்வதற்கு ஒரு பொன்னான நாளாக இருக்கிறது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







