பிறவி பிணியை போக்கும் சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி பதிகம்
வழிபாடுகளில் அம்மன் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது.எப்பொழுதுமே அம்மன் நம்முடைய தாயாக இருந்து நம்மை பேணி பாதுகாப்பவளாக விளங்குகிறாள்.அப்படியாக,வாழ்க்கையை புரிந்து,தெளிந்து அனுபவித்தவனின் வழிபாடு என்னவாக இருக்கும்?
உண்மையில் நாம் கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்ள வேண்டும்?என்பதை உணர்த்தும் வகையிலும்,நமக்கு உண்டான துன்பம் போக்கும் விதமாக நாம் பாட வேண்டிய அபிராமி அந்தாதி பற்றி பார்ப்போம்.
என்குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன் குறை தீர எம்கோன் சடைமேல் வைத்த தாமரையே.
விளக்கம்:
அன்னை அபிராமியே,உன் கட்டளையால் நான் இப்பிறவி எடுத்தேன்.மனித வாழ்வில் அனுபவிக்கவேண்டிய வலிகள் துன்பம் எல்லாம் அனுபவித்து விட்டேன்.அதை போக்க உன்னை நான் முழுவதுமாக சரண் அடைகின்றேன் தாயே!உன் திருவடியை பற்றிய எனக்கு இனி ஒரு பிறவி கொடுக்காமல் இருப்பதே உன் கடமையாகும்.
நான் உன் திருவடிகளை பற்றி கொண்டேன்.இனியும் எனக்கு ஒரு பிறவி கொடுத்தால் அது உன் பிழையே தாயே! என்று உருகி பாடுகிறார் அபிராமி பட்டர்.
உண்மையில்,இறைவனை நெருங்கிய மனம் இதை தான் கேட்கும்.இதை தவிர அவன் இறைவனிடம் வேண்டிட என்னஇருந்திட போகிறது?பாக்கியத்தில் மிக பெரிய பாக்கியம் இனி ஒரு பிறவி எடுக்காமல் இருப்பதே ஆகும்.
எல்லாம் கடந்து போகும் உலகில் நம்முடைய முழுமூச்சாக இறைவன் நம் மனதில் இருக்க வேண்டும்.எந்நிலை வந்தாலும் தர்மம் மீறாத நெஞ்சுள்ளம் கொள்ள வேண்டும்.இதுவே நமக்கு நாம் கொடுக்கப்படும் விடுதலை ஆகும்.
மேலும் எவர் ஒருவர் இந்த அபிராமி அந்தாதியை மனதார சொல்லி வேண்டுகிறார்களளோ அவர்களுக்கு அன்னை அசைக்க முடியாத வலிமையையும் எதையும் எதிர்க்கும் சக்தியை கொடுக்கிறாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |