வாஸ்து : வீடுகளில் படுக்கைக்கு எதிரே கழிப்பறை இருந்தால் கவனமாக இருங்கள்
இந்து மத சாஸ்திரத்தில் படி நாம் எந்த ஒரு ஒரு கட்டிடம் துவங்க வேண்டும் என்றாலும் வாஸ்து பார்த்து தான் தொடங்குவோம். அந்த வகையில் வாஸ்து ரீதியாக நம்முடைய படுக்கையறை, சமையல் அறை, பூஜை அறை சரியான இடத்தில் அமைக்க வேண்டும். இவை சற்று மாறுபட்டு அமையும் பொழுது வாஸ்து ரீதியான அனைத்து பிரச்சனைகளும் நாம் சந்திக்க நேரும்.
அதுமட்டுமல்லாமல் தற்போதைய கால சூழ்நிலையில் படுக்கை அறையோடு சேர்த்து குளியல் அறை கட்டுகிறார்கள். அந்த வகையில் உங்கள் வீடுகளில் வாஸ்து ரீதியாக படுக்கையறையில் கழிப்பறை அல்லது குளியல் அறை இருந்தால் நீங்கள் நிறைய விஷயங்களை மனதில் கொண்டு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், படுக்கை அறையில் கழிப்பறை இருந்தால் படுக்கையை அதன் முன் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அதாவது உங்கள் படுக்கைக்கு முன்னால் கழிப்பறை இருப்பது என்பது பல வகையான பிரச்சனைகளை உண்டாக்க செய்யும்.

கழிப்பறை அல்லது குளியல் அறை நீருடன் தொடர்புடையது. அது ராகுவின் வசிப்பிடமாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த இடம் எதிர்மறை சக்திகளை அதிகரிக்க கூடும். அதைவிட முக்கியமாக கணவன் மனைவி இடையேயான உறவை அது பாதிக்கிறது.
படுக்கையறை ஓய்வெடுக்கும் இடம் என்பதால் குளியல் அறையில் எதிர்மறை ஆற்றல்கள் நாம் உறங்கும் பொழுது நேரடியாக பாதிக்கிறது. இது நமக்கு நோய் மற்றும் மன அழுத்தத்தை சேர்க்கிறது. அதுமட்டுமில்லாமல் வீடுகளில் பொருளாதார சிக்கலை உண்டு செய்கிறது.

இந்த வாஸ்து குறைபாடுகளில் இருந்து உங்களை பாதுகாக்க சில முக்கிய பரிகாரங்களை செய்யலாம். அதாவது குளியலறை கதவை பயன்படுத்தியவுடன் மூடி விடுங்கள். திறந்திருக்கும் பொழுது அவை நம்முடைய படுக்கை அறையில் அமைதியை கெடுக்கக்கூடும். இதைவிட முக்கியமான ஒரு தீர்வு ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி குளியலறையில்
ஒரு மூலையில் வைத்து விட்டால் உப்பு எதிர்மறை சக்தியை எடுத்து நமக்கு ஒரு அதிர்வலையை கொடுக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் நம் உப்பை மாற்றி அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து குறைபாடுகள் முற்றிலுமாக விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |