நவமியில் இதை மட்டும் செய்து பாருங்கள்- அதிர்ஷ்டம் தேடி வருமாம்
நம்முடைய இந்து மதத்தில் அஷ்டமி, நவமி தினத்தில் எந்த ஒரு காரியமும் செய்ய மாட்டார்கள். அதாவது நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாளைக் குறிப்பதாக ஆகும்.
இந்த நாளில் எந்த ஒரு புதிய விஷயத்தையும் தொடங்கமாட்டார்கள். அதனால், மிகவும் கலையுற்ற அஷ்டமி, நவமி இரு திதிகளும் மஹாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை சொல்லி முறையிட்டார்கள். அவர்களுக்கு விஷ்ணு பகவான் கவலை கொள்ளாதீர்கள், உங்களை மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார்.
அதன்படியே, வாசுதேவர் தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதேப்போல், நவமி திதியில் தசரதர் கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான்.
அன்றைய தினத்தை உலகம் எங்கிலும் ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. இருந்தாலும், நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் தொடங்குவது இல்லை. ஆனால், அன்று தெய்வீக காரியங்கள் எல்லாம் செய்வதற்கு ஏற்ற நாளாகும்.
பொதுவாக, நவமி அஷ்டமி நாளில் செய்யும் காரியங்கள் இழுபறியாகும் என்றும் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் என்றும் கருத்துக்கள் உண்டு. ஆனால், அன்றைய தினம் ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ தோஷத்துடன் இருந்தாலும் அவர்கள் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
மேலும், நவமி அஷ்டமி தினத்தில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவை செய்யலாம், அவை நல்ல பலன் அளிக்கும். அதோடு, நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம்.
மிக முக்கியமாக, அன்றைய தினத்தில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால் அனைத்து சுபகாரியமும் சுபமாக நடைப்பெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |