வாஸ்து: இந்த விஷயம் தெரியாமல் வீடுகளில் கருவேப்பில்லை மரம் வளர்க்காதீர்கள்
பொதுவாக, மரம் செடி கொடிகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அவை மனதிற்கு ஒரு வித அமைதியை கொடுக்கக்கூடியது மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி ஒரு நல்ல அதிர்வலைகளை உண்டாக்க செய்யும். அந்த வகையில் நாம் வீடுகளில் ஒரு குறிப்பிட்ட சில மரங்களே வளர்க்கலாம் என்றும், சில மரங்களை வளர்க்கக்கூடாது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதிலும் அகத்தியர் முனிவர் அவரின் ‘புனைச்சுருட்டு’ நூலில் பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலம், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, கரு ஊமத்தை, வில்வம், இலவம், ருத்ராட்சம், உதிரவேங்கை ஆகிய 17 வகையான மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என சொல்லியிருக்கிறார்.
காரணம், இந்த மரங்கள் எல்லாம் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மையை கொண்டது என்பதால் இதனை நாம் வீடுகளில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக புளிய மரம் சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகள் வாங்குவதையே தவிர்த்து விடவேண்டும் என்கிறார்கள். அப்படியாக, என்ன மரங்கள் நாம் வீடுகளில் வளர்க்கலாம், என்ன மரங்களை வீடுகளில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. இந்து மதத்தில் அரச மரம் புனிதமானதாக கருதப்பட்டாலும், அவை வீடுகளில் வளர்ப்பது நன்மை அளிப்பது இல்லை. நம் வீடுகளில் அரச மரம் வளர்ப்பதால் வீட்டில் மன அமைதி, பண விரயம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அதோடு அரச மரத்தின் வேர்கள் சுவர்களில் பரவினால் வீடுகளில் சேதம் உண்டாகும்.
2. மரங்களில் வில்வ மரம் மிகவும் தெய்வீக அம்சம் பொருந்தியது. இருந்தாலும், நாம் அதை வீடுகளில் வளர்க்கக்கூடாது. இந்த மரத்தை வீடுகளில் வளர்ப்பதால் குடும்பத்தினருக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகும். அதோடு, வில்வ மரம் கோயில்களில் தல விருட்சமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. நாவல் பழம் என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒரு பழம் ஆகும். இவை வீடுகளில் வளர்க்கக்கூடாது. இந்த மரம் மிகவும் குளிர்ச்சி பொருந்தியது இது நச்சுப் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. இந்த பூச்சிகள் வீட்டிற்குள் வரும் என்பதால் இந்த மரத்தை வீட்டைச் சுற்றி வளர்க்க கூடாது என முன்னோர்களால் சொல்லியிருந்தார்கள்.
4. அதேப்போல் அத்தி மரத்தையும் வீடுகளில் வளர்க்கக்கூடாது. அத்திப்பழம் பறவைகளுக்கு மிகவும் பிடித்த பழம். இந்த பழத்தை சுவைப்பதற்காக வௌவால்கள் அத்தி மரத்தை தேடி வரும். வௌவால்கள் அதிக நோய்கள் பரப்பக்கூடிய தன்மை கொண்டது என்பதாலும், வௌவால்கள் வீட்டிற்கு வருவது எதிர்மறை விளைவுகளை கொடுத்து விடும் என்பதாலும் நாம் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
5. நாம் சமையலுக்கு வீடுகளில் கருவேப்பில்லை அதிக அளவில் பயன்படுத்துவோம். ஆனால், இந்த மரத்தை வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தால் மட்டுமே வளர்க்கவேண்டுமே தவிர்த்து பிற வீடுகளில் இந்த மரத்தை வளர்க்கக்கூடாது. மீறி வளர்த்தால் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகும்.
6. மேற்கண்ட மரங்களைத் தவிர, பலா, பனை மரம், இலந்தை மரம் போன்றவற்றையும், கற்றாழை, சப்பாத்திக்கள்ளி போன்ற முள் உள்ள செடிகளையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. இந்த வகை மரங்கள் மற்றும் செடிகள் வீட்டில் கஷ்டத்தை கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது.
நாம் வீடுகளில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரங்கள் என்று எடுத்துக்கொண்டால் மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற மரங்களை வளர்க்கலாம். கொய்யா மரங்களை வளர்க்கலாம். இவை நல்ல அதிர்ஷ்டத்தை தேடிக்கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |