இன்றைய ராசிபலன் (16-07-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிராக சிலர் வாக்குவாதங்களும் விவாதங்களும் செய்ய வாய்ப்புகள் உள்ளது. மனம் அமைதிப்பெற தியானம் செய்யலாம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று வெளியூர் பயணம் சில சங்கடங்களை உருவாக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். படிப்பில் கவனம் தேவை.
மிதுனம்:
இன்று உங்கள் குடும்பத்தில் எதிர்பாராத சில நல்ல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. அக்கம்பக்கத்தினரிடம் கவனமாக பழகவேண்டும். தந்தை வழி உறவால் சில சங்கடம் உண்டாகலாம்.
கடகம்:
இன்று திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும். உங்கள் கருத்துக்கு சிலர் எதிர்கருத்துகள் தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளது. தந்தை வழியாக உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்:
இன்று குடும்பத்தில் மறைமுக எதிரிகளால் சில தொல்லைகள் உருவாகலாம். மனதிற்கு பிடித்த காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் சந்திக்கலாம்.
கன்னி:
இன்று பெற்றோர்கள் பிள்ளைகளை அதீத கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் நல்ல ஆதாயமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை நன்மை அளிக்கும்.
துலாம்:
இன்று உங்களை விட்டு சென்ற நபர் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவீர்கள். மன உளைச்சல் விலகும். இறைவழிபாடு ஆறுதலாக அமையும்.
விருச்சிகம்:
பணியிடத்தில் உள்ள பணிகளை கவனமாகவும், திட்டமிட்டு செய்ய வேண்டும். சக பணியாளர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். நாளை பண வரவு ஆனது மகிழ்ச்சியாக காணப்படும்.
தனுசு:
இன்று உங்களை சுற்றி உள்ள போலி முகங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல காதல் உருவாகும்.
மகரம்:
பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக பணிகளை செய்வீர்கள்.
கும்பம்:
பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் ஆனது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். நன்மையான நாள்.
மீனம்:
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடைப்பெறும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகி செல்லும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |