பகவத் கீதை: எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் என்று வருந்துபவரா?
நம் வாழ்க்கையில் கட்டாயம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில், நான் என்ன தவறு செய்தேன், யாரை காயப்படுத்தினேன் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே என்று வருந்துவது உண்டு.
அந்த வேளையில் கடவுளும் நம்மை விட்டு விலகி நிற்பது போல் தோன்றும். அப்பொழுது செய்வதறியாது நிற்கும் நமக்கு கீதை சொல்வது என்னவென்று பார்ப்போம்.
மகாபாரதத்தில், அர்ஜுனன் யாருக்கும் எந்த ஓரு தீங்கும் செய்யவில்லை. அனைவரும் வெறுத்து பயந்து ஒதுங்கும் அளவிற்கு மோசமான நபரும் இல்லை. அர்ஜுனன் பொறுமையான, நல்ல புத்திகூர்மை கொண்ட நல்லுள்ளம் படைத்தவன்.
பாரதப்போரில் எதற்காக இவை எல்லாம் நடக்கிறது என்று பல கேள்விகளுடன் போராடியவன். நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான கருத்துக்கள் உண்டு, அதாவது நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்று. அவை பல நேரங்களில் கேள்வி குறியாகவே நிற்கிறது.
அப்படியாக, பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார் ஒருவர் அனுபவிக்கும் வலி அவர்கள் ஏதெனும் தவறுகள் செய்து இருந்தால் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்பது இல்லை. துன்பம் என்பது ஒவ்வொரு மனிதனும் அனுபவித்தாகவேண்டிய காலத்தின் கட்டாயம்.
அவை நம்முடைய தண்டனைகள் அல்ல மாறாக நம் மன சிறையை திறக்கும் ஒரு சாவி. மேலும், கீதை சொல்கிறது ஒரு மனிதன் துன்பம் அனுபவிக்கும் பொழுது மட்டுமே அவன் அவனை முழுமையாக உணர்கின்றான். ஒருவருடைய பலம், பலவீனம் அறிந்துக்கொள்ள துன்பமே சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
சமயங்களில் அளவிற்கு அதிகமான துன்பம், வலி நம்மை சூழும் பொழுது நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்று விடலாம் என்று தோன்றும். ஆனால், அதை எதிர்த்து போராடும் பொழுது தான் நம்முடைய வலிமை அதிகரிக்கிறது.
அதோடு, பகவத் கீதையில் நமக்கு வரும் ஒவ்வொரு துன்பங்களையும் வேதனைகளும் முழுமையாக அனுபவித்து உணர்ந்து அதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்கிறது. நடந்ததை எண்ணி வருந்திக்கொண்டே இருந்தால் நம்முடைய காயங்கள் கூடுதல் வலியைக் கொடுக்குமே தவிர்த்து அதில் இருந்து நாம் மீள முடியாது.
ஆதலால், நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்றும், இனி நடக்கபோவதும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டும் காயங்களை மன்னித்து ஏற்கும் குணம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.
ஆக, மனிதனை பக்குவப்படுத்த துன்பத்தை போல் ஒரு சிறந்த ஆசிரியர் இல்லை. வாழ்க்கை கொடுக்கும் ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |