கோடி கோடியாய் பணமழை: இந்த மந்திரங்களை கட்டாயம் சொல்லுங்க
கோடீஸ்வரன் ஆக என்னென்ன மந்திரங்களை சொல்ல வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சில மந்திரங்களைக் கூறி தெய்வத்தை வணங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் வீட்டில் எதிர்மறைஆற்றல் நீங்குவதுடன், பணக்கஷ்டம் நீங்கி நிம்மதியும் கிடைக்குமாம்.
ஆனால் சில மந்திரங்கள் நமக்கு செல்வத்தையும், விலையுயர்ந்த நகைகளையும் கொடுக்குமாம். மேலும் இந்த மந்திரங்களை நாம் கூறும் போது இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாராம்.
மேலும் குபேரர் யோகமும், பலமடங்கு செல்வமும், மன ஆரோக்கியம், தொழிலில் லாபமும் கிடைக்கும்.
கோடீஸ்வரன் ஆக்கும் மந்திரம்
கனகசார சோத்திரம் மிகவும் பரிசுத்தமானது என்றும், இதனை முழு மனதுடன் படித்தால் குடும்பத்தில் பொன்மழை பொழியும் என்று நம்பப்படுகிறது. “கனகம்” என்றால் தங்கம், “சார” என்றால் மழை என பொருள்.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலாத்மிகாயை நமஹ” என்ற பீஜ மந்திரத்துடன் சேர்த்து ஜபித்தால் பலன் விரைவில் தெரியும்.
ஸ்ரீ மகாலட்சுமியை வெள்ளிக் காலையில் சுபகாலத்தில் புஷ்பங்களால் அலங்கரித்து, மஞ்சளும் குங்குமமும் வைத்து இந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
இதனால் பழைய பாக்கிகள், திரும்ப கிடைக்கவே கிடைக்காது என நினைத்த கடன்கள் உள்ளிட்டவை உங்களை தேடிவரும்.
மேலும் நீங்கள் செய்யும் பணிகளில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்கி அதில் பல மடங்கு லாபம் ஈட்டுவீர்கள்.
வெள்ளிக்கிழமை, பவுர்ணமி தினங்களில் 108 முறை ஜபித்தால் மகத்தான பலன் தரும். புதிய வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் கிடைப்பதுடன் எடுக்க எடுக்க குறையாக வகையில் பணப்புழக்கம் இருக்கும்.
குபேரி மந்திரத்தின் ரகசியம்
“குபேர மந்திரம்” என்பதும் நிதி வரவை பெருக்கும். “ஓம் யக்ஷாய குபேராய வைஶ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய சம்பத்திமே தேஹி தபயஸ்வா மஹாராஜாய நமஹ” என தினமும் சொல்வது சிறந்தது.
குபேரரின் வண்ண சிலை அல்லது போட்டோவை வடபகுதியில் வைக்கலாம். நம் உழைப்புடன் இந்த மந்திர பலனும் சேரும்போது, வாழ்க்கையில் நிச்சயமாக பொன்மழை பொழியும்.
இவற்றை அனுசரித்தால் தெய்வத்தின் அருள் உண்டாகி, செல்வத்தோடு ஆனந்தம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |