அட்சய திருதியை 2025: வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக செய்யவேண்டிய 5 விஷயங்கள்

By Sakthi Raj Apr 25, 2025 07:00 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் அட்சய திருதியை என்பது மிகவும் முக்கியமான நாளாகும். அன்றைய தினம் நமக்கு அதிர்ஷ்டம் தேடி கொடுக்கும் நாளாக கருதப்படுகிறது. இந்த வருடம் அட்சய திருதியை ஏப்ரல் 30-ம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.

அதாவது, ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 05:31 மணிக்கு திருதியை தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி மதியம் 02:12 வரை திருதியை உள்ளது. ஏப்ரல் 30-ம் தேதியே சூரிய உதய காலத்தில் திருதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த சித்திரை அமாவாசை அன்று சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்

சக்தி வாய்ந்த சித்திரை அமாவாசை அன்று சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்

இன்றைய தினம் பலரும் அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் பெற அதிர்ஷ்டமான பொருட்களை வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் பொழுது நம்முடைய வீட்டில் நல்ல மாற்றமும் நேர்மறை எண்ணம் சூழ்வதையும் பார்க்க முடியும்.

அந்த வகையில் அட்சய திருதியை நாளில் வாஸ்து ரீதியாக நாம் சில விஷயங்கள் செய்வதால் நம்முடைய வீட்டில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

அட்சய திருதியை 2025: வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக செய்யவேண்டிய 5 விஷயங்கள் | Akshya Tritiya 2025 Worship And Importance

1. நம் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி மிகவும் முக்கியமான ஒன்று. அந்த கண்ணாடியை வீட்டின் வடக்கு நோக்கி உள்ள திசையில் வைப்பதால் நம்முடைய மனம் அமைதி பெறுவதோடு, வீட்டில் உள்ள வறுமை விலகும்.

2. கண்டிப்பாக எல்லாருடைய வீட்டிலும் கவனிக்க படாத சொட்டும் குழாய்கள் இருக்கும். அதை அட்சய திருதியை நாளில் சரி செய்வதால் நம்முடைய பொருளாதாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். காரணம், தண்ணீர் தேவை இல்லாமல் சிந்தினால் வீட்டில் பணம் நிலைக்காது என்பது ஐதீகம்.

3. நாம் தொழிலில் சிறந்து விளங்க தொழில் செய்யும் இடத்தின் படத்தை அட்சய திருதியை நாளில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதால், தொழிலில் உண்டான தடைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல் விலகும்.

4. பொதுவாக மீன்கள் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடாக பார்க்க படுகிறது. அட்சய திருதியை நாளில் வீடுகளில் மீன் தொட்டி வாங்கி அதில்  8 தங்க மீன்கள் மற்றும் 1 கருப்பு மீனை வாங்கி வளர்க்கலாம். இது நேர்மறை ஆற்றலை உண்டு செய்யும்.

5. அட்சய திருதியை நாளில் வீடுகளில் மஹாலக்ஷ்மி தாயாரின் படத்தை வாங்கி வைத்து வழிபாடு செய்வது நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பையும் மஹாலக்ஷ்மி தாயாரின் அருளையும் பெற்று கொடுக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US