வீராதி வீரனை வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றியே
மகாவீரனான அனுமனை உன் இஷ்ட தெய்வமாக்கிக் கொள். புத்திசாதுர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்ற நற்பண்புகளின் சொந்தக்காரர் அனுமன்.
தன் தலைவனான ஸ்ரீராமபிரானின் நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்ய காத்திருந்த அனுமன் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யப் பழக வேண்டும்' - என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
புத்திமான் பலவான் என்பதற்கேற்ப புத்திக்கூர்மையும், உடல்பலமும் கொண்டவர் அனுமன். மனைவியைப் பிரிந்த ராமரின் மனம் மகிழ 'கண்டேன் சீதையை' என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர்.
அவரது அசாத்திய பலத்தை யாரும் எடை போட முடியாது. எவர் ஒருவர் அனுமனை அனுதினமும் மனதில் நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் பயம் என்பதே இருக்காது.
ஆக சனிக்கிழமைகளில் ஆஞ்சிநேயர் கோயில் வழிபட தோஷங்கள் இருந்த நிவர்த்தி ஆகும்.மேலும் ஆஞ்சிநேயருக்கு பிடித்த வடை மாலை சாற்றி வழிபாடு செய்ய நினைத்த காரியம் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |