இந்த ஒரு விஷயம் செய்பவர்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்குமாம்
இந்த உலகம் ஒரு மாயை. ஆனால் இந்த மாயையில் இருந்து விடுபடுவதற்கு மனிதர்களுக்கு சற்று கடினமாக இருக்கிறது. காரணம் வாழும் அந்த குறைந்த நாட்களில் மாயை உலகை கையாள தெரியாமல் போவது தான்.
அப்படியாக இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது? இதில் நாம் யார்? நம்முடைய வேலை என்ன? கடவுளால் படைத்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை வெவ்வேறு விதமாக இருக்கிறது.
இந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் கடவுளை நெருங்க முடியும்? என்ன செய்தால் கடவுளின் ஆசிர்வாதம் நமக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்று பார்ப்போம்.
இங்கு மனிதர்களுக்கு ஒரு குணம் உண்டு. இருப்பதை தவிர்த்து இல்லாததை தேடிக்கொண்டிருக்கும் ஒரு பழக்கம் அது. அப்படியாக பிறக்கும் மனிதர்களுக்கு கட்டாயம் சூழ்நிலைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைவது இல்லை.
இத்தனை கோடி மக்கள் இவர்கள் அனைவரும் கர்ம வினையின் பிடியில் தான் சிக்கிக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை நடத்துகிறார்களா என்று கேள்வியும் நான் எல்லோருக்கும் ஓடுவது இயல்பானது தான்.
அப்படியாக, இந்த பரந்து விரிந்த உலகில் தெரிந்த மனிதர்கள் சில தெரியாத மனிதர்கள் ஏராளம். இவர்கள் எல்லோரும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு என்று கொடுக்கப்பட்ட வாழ்க்கையை அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். எங்கிருந்து நமக்கு நம்முடைய சொந்தங்கள் மீது பிடிப்பும், கோபம், ஆசை இவை எல்லாம் வருகிறது?
எல்லாவற்றுக்கும் விடை தேடினோம் என்றால் இறுதியாக ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் பகவத் கீதைகள் அருளிய ஒரு வரி தான் விடையாக இருக்கிறது "உன்னுடைய கடமையை செய் அதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது " என்பது மட்டுமே.
ஆக இந்த கடமை என்பது முதலில் நம்முடைய சூழலை அவ்வாறே ஏற்றுக் கொள்வது ஆகும். மேலும் நமக்கு மன நிம்மதி எப்பொழுது கிடைக்கும் என்று தேடினோம் என்றால் இதுதான் நான் இந்த பிறவியில் எனக்கு கொடுக்கப்பட்ட உடல் இந்த பிறவியில் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர், இவர்கள் தான் இந்த பிறவியில் எனக்கு கிடைத்த பெற்றோர்கள், இந்த பிறவியில் நான் இந்த வேலையை செய்து தான் என்னுடைய கடமையை ஆற்ற வேண்டும் என்ற நிலையைஏற்றுக் கொள்வதனால் மட்டுமே கிடைக்கும்.
அந்த கடமைகளை செய்து அதில் நாம் எவ்வாறு நல்ல வழியில் நம்முடைய முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல முடியுமோ அதை நாம் செய்து விட வேண்டும். எப்பொழுதும் நமக்கு படைக்கப்பட்டது இவ்வளவு தானா? எனக்கு கிடைத்த வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா? என்று ஒரு பொழுதும் எண்ணக்கூடாது.
மேலும், இறைவன் எப்பொழுது ஒரு மனிதனை விரும்புகின்றான் என்றால் இறைவன் கொடுத்ததை ஒரு மனிதன் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவ்வாறே ஏற்று பழகிக் கொண்டு அவருடைய கடமையை செய்ய தவறாமல் இருக்கின்றானோ அவனுக்கு இந்த பிரபஞ்சம் தலைவணங்கி அவன் கேட்பதே கொடுக்க கூடிய ஒரு வரத்தை அளிக்கிறது.
ஆக இந்த உடலில் இருக்கக்கூடிய உயிர் பிரிந்து விட்டது என்றால் நம் உயிர் என்று நினைத்து வாடும் உறவுகள் கூட யாரோ ஒருவராக மாறிவிடுவார்கள். அதனால் எதன் மீதும் அவ்வளவு பற்று இல்லாமல் எதன் மீதும் நம்முடைய மனதையும் நம்முடைய நேரத்தையும் முழுமையாக செலுத்தாமல் தாமரை இலையில் விழக்கூடிய நீர்த்துளி போல் வாழ்ந்து விட்டால் நாம் இறைவனை தேடி போக வேண்டாம். இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு ஆசீர்வாதம் வழங்குவார்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







