திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் கோலாகலம்
ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி நகரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும்.
சீதை மற்றும் லட்சுமணனுடன் விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று வைகானச ஆகம சாஸ்திரபடி வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.
இவ்விழாவையொட்டி உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் யாக சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதன்பிறகு சாத்துமுறை மற்றும் ஆஸ்தானம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்திருச்சி வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி உலா வந்தனர்.
இதனைத்தொடர்ந்து இரவு பவித்ர பிரதிஷ்டை மற்றும் சயனாதிவாசம் உள்ளிட்ட சடங்குகள் நடந்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







