ஏப்ரல் மாத 5 கிரக பெயர்ச்சி - லக்கி பாஸ்கராக மாறப்போகும் 3 ராசிகள்
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார். ஏப்ரல் 03ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கும், ஏப்ரல் 06 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் உதயமாகவும் உள்ளனர்.
பின் ஏப்ரல் 07 ஆம் தேதி புதன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதோடு ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவுள்ளார். இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மகரம்
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையே உறவு நன்றாக இருக்கும்.
கடகம்
ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.