இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (28/04/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 28, 2024 03:36 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

ரிஷபம்

முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். செயல்களில் விழிப்பு தேவை. குறுக்கு வழியில் வரும் ஆதாயத்தினால் சட்ட ரீதியான சங்கடம் ஏற்படலாம். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்

உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.நீண்டநாள் முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

கடகம்

மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். செயலில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.

சிம்மம்

பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலைப் பேசித் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத் தேடிவருவார்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.பணியிடத்தில் உங்கள் செயல்களுக்கு பாராட்டு அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி

உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள். வெளியூர் பயணத்தால் சிறு சங்கடங்கள் தோன்றும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வீர்கள்.வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனதில் சோர்வு உண்டாகும்.

நோய் தீர்க்கும் தெய்வங்களும், நோய் தீர்க்கும் கிழமைகளும்

நோய் தீர்க்கும் தெய்வங்களும், நோய் தீர்க்கும் கிழமைகளும்


துலாம்

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். சொத்து வகையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும்.

தனுசு

மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். மற்றவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். மனதில் தேவையற்ற சிந்தனை வரும், மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். கடவுள் வழிபாடு நிம்மதியை ஏற்படுத்தும்.

மகரம்

வரவை விட செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை. மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம்.

கும்பம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். .இடம் சம்பந்தமான பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மூத்த சகோதரர் உங்கள் செயலுக்கு உதவியாக இருப்பார்.

மீனம்

தொழிலை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்..எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்துசேரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள்.

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US