இன்றைய ராசி பலன்(06-04-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்களிடம் இனிமையாக பேசி நேரம் செலவிடுவார்கள்.
ரிஷபம்:
மனதில் உள்ள குழப்பங்கள் அகலும். நேற்று வரை சந்தித்த நெருக்கடிகள் நீங்கும். ஒரு சிலருக்கு உறவினர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நன்மையான நாள்.
மிதுனம்:
வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதையும் நிதானமாக செய்து காரியத்தை சாதிப்பீர்கள். பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். உதவி கேட்டு சிலர் உங்களை தேடி வருவார்கள்.
கடகம்:
உங்கள் செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உதவி என்று கேட்போருக்கு உதவி செய்வீர்.
சிம்மம்:
மதியம் மேல் வியாபாரத்தில் சில சிக்கலை சந்திக்கலாம். கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனைகள் அகலும். நீண்ட நாள் கைக்கு வராத பணம் உங்கள் கைகளுக்கு வரும்,
கன்னி:
திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்:
எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவை எடுப்பீர்கள். வீட்டில் சில சண்டைகள் உருவாகலாம். எதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தியானம் செய்வதால் நன்மை கிடைக்கும்.
விருச்சிகம்:
தந்தை வழி உறவுகளால் உங்கள் வேலை நடந்தேறும். பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் வேலைகளை முடிப்பீர். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வழிபாட்டில் பங்கேற்பீர்.
தனுசு:
வண்டி வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தேவை இல்லாத பிரச்சனையால் மன கசப்பு உண்டாகும். நீங்கள் வைத்த நம்பிக்கை இன்று எதிர்மறையாகும்.
மகரம்:
சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். பெரியோரிடம் ஆசி வாங்குவீர்கள். வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
கும்பம்:
இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்.
மீனம்:
உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்சன்னை சரி ஆகும். நீண்ட நாள் கைக்கு வராத சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். பிள்ளைகள் தேவை பூர்த்தி செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |