இன்றைய ராசி பலன்(03-04-2025)

Report

மேஷம்:

உங்கள் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்றைய நாள் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்:

பணியிடத்தில் உங்களுக்கான மரியாதை உயரும். சமுதாயத்தில் உங்களுக்கான செல்வாக்கு உயரும். சிந்தித்து செயல்பட்டு சாதனை செய்வீர்கள். நன்மையான நாள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மனதில் சில சங்கடம் உருவாகும். இன்று பிறருக்கு கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். முயற்சி வெற்றியாகும்.

கடகம்:

திடீர் அதிர்ஷ்ட செய்திகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சிம்மம்:

பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் கடந்த கால அனுபவம் உங்களுக்கு உதவியாக அமையும். துணிச்சலாக முடிவு எடுத்து சாதனை செய்வீர்கள்.

கன்னி:

திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். முன்னேற்றமான நாள்.

வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா?

வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா?

 

துலாம்:

மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சில சங்கடங்கள் தோன்றும்.

விருச்சிகம்:

எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்.

தனுசு:

சொத்து விவகாரத்தில் உண்டான சிக்கல் விலகும். செயல்களில் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். உங்களுக்கு சாதகமான நாள்.

மகரம்:

குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பிள்ளைகள் உங்கள் வேலைக்கு உதவியாக இருப்பர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்:

 சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்கள் முயற்சியை லாபமாக்கும்.

மீனம்: 

உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நிறைவேறும். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். வேலை செய்யும் இடத்தில உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US