இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (25/04/2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
மேஷம்
நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபநிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்கமான செயல்கள் வெற்றியாகும். கூட்டுத் தொழிலில் இருந்து லாபம் வந்துசேரும். தம்பதி இடையே இருந்த பிரச்னை விலகும். பிறரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.
ரிஷபம்
உடல்நிலை சீராகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும்.விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியே நன்மைகள் அதிகரிக்கும்.உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். தொழிலில் உண்டான தடைகள் விலகும்.
மிதுனம்
குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.
கடகம்
அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவு உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உங்கள் முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத்தேடி வருவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை இன்று சந்திப்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.வியாபாரத்தின் நுணுக்கம் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும்.
கன்னி
குடும்பத்தில் சொத்துப் பிரச்னை ஏற்படும். நீங்கள் ஈடுபடும் செயல்கள் லாபமாகும். உங்கள் சுய ஆற்றல் இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்.
துலாம்
கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். உறவினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறு.
விருச்சிகம்
மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள்.
தனுசு
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். கேளிக்கை, சந்தோஷம் என்று செலவுகள் செய்வீர்கள். நட்புகளால் ஆதாய பாதை தெரியும்.
மகரம்
உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும். வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உண்டாகும்.
கும்பம்
பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தந்தை வழி உறவினரால் உங்கள் செயல் வெற்றியாகும்.
மீனம்
நேற்றுவரை உங்கள் செயல்களில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். மனதில் இருந்த பயம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பாராத சங்கடங்களும் மனதில் குழப்பமும் ஏற்படும். விழிப்புணர்வு அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |