மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு காதலில் வெற்றி கிடைக்கும்..
ஜோதிட ரீதியாக 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம், வாழ்க்கை முறை இருக்கும். மேலும், ஜாதகத்தில் கிரக நிலைகள் அமைந்திருக்கக்கூடிய இடத்தை பொறுத்தும் அவர்களுடைய வாழ்க்கை முறை மாறும். அந்த வகையில், ஜாதகரீதியாக யாருக்கு காதல் திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, ஒரு சிலர் காதல் செய்து இருந்தாலும் அவை திருமணத்தில் முடிவதில்லை. ஒரு சிலருக்கு காதலே அமைவதில்லை. இவ்வாறான விஷயங்களுக்கு அவர்கள் தன்னை தானே குற்றம் சொல்லிக் கொள்வது உண்டு.
ஆனால், உண்மையாக நாம் அவர்களுடைய ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு காதலில் தோல்வி அல்லது காதலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அல்லது காதலே இல்லை என்கின்ற ஒரு அமைப்பு இருந்திருக்கும்.

அந்த வகையில், ஜோதிட ரீதியாக, காதல் திருமணம் எடுத்துக் கொள்கின்ற பொழுது அதற்கு முக்கியமான கிரகமாக செவ்வாய் மற்றும் சனி உள்ளது. இந்த இரு கிரகங்களும் ஏழாம் இடத்துடன் தொடர்பு கொண்டு இருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும், காதல் மற்றும் திருமணத்தின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். புதன் இரண்டாவது திருமணம் அல்லது காதலில் வெற்றியில் தீர்மானிக்க கூடியவராக இருக்கிறார்.
ஜாதகத்தில் 11-ம் வீடு வலுவாக இருப்பது காதல் திருமணம் வெற்றி பெறுவதற்கான முக்கிய அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. நான்காம் வீட்டில் குரு இருப்பது குடும்பத்தின் சம்மதத்தை பெறுவதற்கு சாதகமாக அமையும்.
இதில் சுக்கிரன் பகை பெற்று இருந்தாலும் அல்லது சூரியனுடன் இணைந்து இருந்தாலும் காதல் திருமணத்தின் பொழுது சில தடைகளை சந்திப்பார்கள். ஏழாம் இடத்தில் ராகு தொடர்பு கொள்கின்ற பொழுது வேறு மொழி பேசக்கூடிய நபர்கள் வேறு மாநிலம் வேற நாடுகளில் வசிக்கக்கூடிய நபர்களுடைய காதல் உண்டாகும்.
அதோடு, திருமணங்களைப் பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்ளவோம்தெரிந்து கொள்வோம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |