திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள்.. பல மணிநேர போராட்டத்திற்கு பின் தரிசனம்
பொதுவாக விடுமுறை தினங்களில் கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் திருவண்ணாமலை - அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் இருந்து சுவாமி தர்சனம் செய்து செல்கிறார்கள்.
இவ்வளவு பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் எப்படி செய்தார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
வழிபாடு
இதன்படி, இன்றைய தினம் காலை 4.30 மணிக்கு “ஆகம விதிப்படி” கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாலை பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தர்சனம் செய்து விட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.
அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் 2ஆவது பிரகாரத்தில் இருக்கும் பெரிய நாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை செய்யப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |