கரி நாள் அன்று நாம் செய்யக்கூடாதவை
அனைவரது வீட்டிலும் காலண்டர் இருக்கும். நாம் காலண்டரில் பலவற்றை பார்த்து தெரிந்து கொள்கின்றோம்.
அதாவது காலண்டரை பார்த்து தான் நல்ல நேரம் கெட்ட நேரம். சந்திராஷ்டமம் ராசி பலன்கள் இப்படி அன்றைய நாளுக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொள்கின்றோம்.
இப்படியாக காலண்டரில் கரி நாள் என்று குறிப்பிட்டிருக்கும். அதை பார்த்து இருப்போம். நிறைய பேருக்கு கரி நாள் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்திருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
கரி நாள் என்றால் "நஞ்சு "என்று பொருள். அன்றைய தினத்தில் சூரியனின் கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் என்று சில நாள் வரும்.
தை மாதம் இந்த தேதிகள் மாறவே மாறாது. எல்லா வருடங்களுக்கும் இது பொருந்தும். அந்த வகையில் தை மாதம் 1,2,3,11,17 ஆகிய தேதிகள் கரி நாளாக இருக்கும்.
அப்பொழுது அன்றைய தேதியில் நாம் திருமணம் கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆனால் கரி நாள் அன்று தொடர்நது எந்த விஷயங்கள் செய்ய வேண்டியது இல்லையோ அதை செய்யலாம்.
அதாவது கரி நாள் அன்று நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க திரும்ப கடன் வாங்காத சூழ்நிலைகள் உருவாகும்.
ஆதலால் ஒருவர் கடன் பிரச்சனைகள் தீர கரிநாள் அன்று அதை திரும்ப கொடுக்க, மீண்டும் கடன் வாங்காமல் வாழ வழி பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |