(04-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

By Sakthi Raj Apr 04, 2024 03:59 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் விலகி மனம் தெளிவு பெரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் அடைவீர்கள். மறைமுக எதிரியை கண்டறிவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும் 

ரிஷபம்

ரிஷபம் ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று பணிபுரியும் இடத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் தந்தையின் ஆலோசனைகள் கேட்டு நடப்பீர்கள். நீண்ட நாள் முடிவுக்கு வராத பிரச்சனை ஒன்று இன்றைய தினத்தில் முடிவுக்கு வரும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கும். நேற்றைய தினம் ஏற்பட்ட தடைகள் விலகி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் விலக வாய்ப்புகள் உள்ளது வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் காரணத்தை கண்டறிந்து வருமானத்தை சரிசெய்வீர்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று அவர்களின் நண்பர்களின் உதவியால் நினைத்த காரியம் வெற்றிகரமாகும். வாழ்க்கை துணையின் உதவி கிடைப்பதால் எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட பல முயற்சிகள் முன்னேற்றத்தை எடுப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று அவர்களின் ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். திட்டமிட்டு நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். பல நாள் சங்கடம் கொடுத்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும் நிரந்தர வருமானத்திற்கு முயற்சிகள் எடுக்கும் நாள். முயற்சிகள் வெற்றி அடையும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி சந்தோஷம் உண்டாகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றி சந்தோஷம் அடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்கள் திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் முடிவு லாபத்தை உண்டாக்கும். வலிகள் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும்  சமாளித்து வெற்றி கொள்ளும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு காரியத்தை சாதித்து கொள்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். மூன்றாமிடம் சந்திரனால் மனதில் பல நாள் இருந்த மனக்குழப்பங்கள் விலகி மனம் தெளிவடையும். எடுக்கும் முயற்சிகள்  சில முயற்சிகள் தள்ளிப் போகலாம். உறவினர்களால் சில மன சங்கடங்கள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று எடுக்கும் முயற்சிகள் தள்ளிப் போகும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும் என்று காத்திருந்த நேரத்தில் அவர்கள் கைவிடுவார்கள். கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவீர்கள். நேற்றைய பிரச்சனை ஒன்று நல்ல முடிவுக்கு வரும் வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று எண்ணம் நிறைவேறும் நாள் .மன குழப்பம் விலகும். குடும்பத்தில் உள்ள அனைவருடைய தேவையும் நிவர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேர்வதால் மனதில் மகிழ்ச்சிகள் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகாரிக்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று விசேஷங்களில் பங்கு கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சில செலவுகளால் நேற்றைய முயற்சி நிறைவேறும். உங்களுடைய செயல்களுக்கு உறவினர்கள் இன்று உதவிகரமாக அமைவார்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாக வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் நினைத்த நேரத்தில் வந்து உங்களை அடையும் .உங்கள் முயற்சி லாபமாக அமையும். உற்சாகமாக செயல்படும் நாள்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US