இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(17.05.2024)
மேஷம்
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.தடைகள் விலகும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி அடையும்.
ரிஷபம்
வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
மிதுனம்
முயற்சியால் முன்னேறும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். நீண்டநாள் பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். நிதானமாக செயல்படுவதால் சங்கடங்கள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.
கடகம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சியில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையுண்டாகும்.வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
சிம்மம்
இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கன்னி
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.
துலாம்
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்கள்.எளிதாக முடியவேண்டிய வேலையும் கடைசி நேரத்தில் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வருமானம் காண்பீர்கள்.
விருச்சிகம்
தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
மகரம்
செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பில். தடையும் தாமதமும் ஏற்படும். பயம் கூடும். விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
தனுசு
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படவேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும்.
கும்பம்
இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். யோகமான நாள்.
மீனம்
வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.பணியிடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |