இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (13.06.2024)

Report

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று உடல் நிலை சீராகும்.மனதில் உற்சாகமும் தெளிவும் பிறக்கும்.தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் இருந்தாலும் மதியம் மேல் சற்று கவனமாக செயல் பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்கள் இன்று தொழில் ரீதியான வரவு அதிகரிக்கும்.போன் பொருள் சேரும்.தாய் வழி உறவால் நல்ல ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்கள் இன்று நீண்ட நாள் மனதில் இருந்த கவலைகளுக்கு விடை கிடைத்து மனம் தெளிவு பெரும்.வேளையில் உற்சாகமாக செயல் படுவீர்கள்.பிறர் செய்ய இயலாத ஒரு காரியத்தை செய்து முடித்து சாதிப்பீர்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் விலகும்.திடீர் வெளியூர் பயணம் ஏற்படலாம்.நீண்ட நாள் முடிவிற்கு வராத பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் விலகும்.மனம் தெளிவு பெரும்.மன குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல் படுவதால் காரியம் வெற்றியாகும்.

கன்னி

கன்னி ராசி நேயர்கள் இன்று திடீர் வெளியூர் பயணம் வாய்ப்புகள் உண்டு.உடலில் சோர்வு உண்டாகும்.மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று மனதில் இருந்த குழப்பங்கள் விலகி மனம் உற்சாகம் பெறும். செய்யும் செயலில் முழு ஈடுபாடோடு செய்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாக அமையும் நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்தது நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியம் உங்களை வந்து சேரும். பார்த்த பணம் வரும்.

தனுசு

தனுசு ராசி நேயர்கள் இன்று பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவு உடன் ஏற்பட்ட சங்கடங்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயல்படுவதால் செயலில் வெற்றி காணலாம்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று நீண்ட நாள் மனதில் ஓடிக் கொண்டிருந்த கவலைகள் விலகும். புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையை தரும். நிதானத்தை கடைப்பிடித்து பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சி வெற்றிகரமாக அமையும். குடும்பத்திலிருந்து சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாக அமையும்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று தொழிலில் ஏற்பட்ட எதிரிகள் தொல்லை விலகி வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடிகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US