நாளைய ராசி பலன்(30-08-2025)
மேஷம்:
வியாபாரத்திற்காக நீங்கள் கேட்ட உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரிடம் சில வாக்குவாதங்களை தவிர்த்து நாளை அமைதியாக கொண்டு போவது அவசியம். கண் தொடர்பான பிரச்சனை உருவாகலாம்.
ரிஷபம்:
இன்று நண்பர்களுடன் சில மன கசப்புகள் உண்டாகும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று விரும்பிய மாணவர்களுக்கு நற்செய்தி தேடி வரும். சொந்தங்கள் இடையே நற்பெயர் கிடைக்கும்.
மிதுனம்:
வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எண்ணி வருந்துவீர்கள். அலுவலகத்தில் வீண் பழி உண்டாகலாம். வம்பு வழக்குகளை சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
கடகம்:
சொந்தங்கள் வழியாக சில அவப்பெயர்களை சந்திக்க கூடும். மனஉலைச்சலால் சங்கடங்களை சந்திப்பீர்கள். கணவன் உங்களுக்கு இன்று தைரியம் கொடுப்பார். பொருளாதார சிறப்பாக அமையும்.
சிம்மம்:
வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். தாய் உடல் நிலையில் சில மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். மனைவி உங்களுக்கு ஆதரவாக இருந்து செயல்படுவார்.
கன்னி:
எதிர்காலம் பற்றிய கனவுகளை சற்று தள்ளி வைத்து வேலைகள் முழு கவனத்தை செலுத்த வேண்டும். முயற்சியால் செய்தால் மட்டுமே சில காரியத்தை சாதிக்க கூடிய நாள். வேலை பளு அதிகரிக்கும்.
துலாம்:
இன்று உங்கள் உடல் நிலையில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள். சகோதரர்களின் உறவால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
உங்கள் வீடுகளில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம். இறை வழிபாடு மேற்கொள்வதால் மட்டுமே துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம். தேவை இல்லாத கோபத்தை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் விடைகள் அம்மன் வழிபாடுகளில் மேற்கொள்வது சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். கணவன் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்.
மகரம்:
இன்று உங்கள் தாயின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே இன்று நன்மை பெறலாம். முன் கோபம் அதிகம் வரும். கவனம் தேவை.
கும்பம்:
செலவுகளை தவிர்ப்பது நல்லது. மதியம் வரை மனம் சில குழப்பமாகவே காணப்படும். முன்னோர்கள் வழிபாடு செய்வது தடைகளை போக்கி வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
மீனம்:
இன்று உங்கள் மனைவியின் பேச்சை கேட்டு நடப்பதால் சில நன்மைகளை பெறலாம். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் உண்டாகும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு பொற்காலம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







