திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை ஆவணி திருவிழா தேரோட்டம்

By Yashini Sep 01, 2024 02:00 PM GMT
Report

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந் திகதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

ஆவணித் திருவிழா 8ஆம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது.

பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை சாத்தி பவனியில் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை ஆவணி திருவிழா தேரோட்டம் | Avani Festival Chariot At Tiruchendur Murugan

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணித் திருவிழாவின் 10ஆம் நாளான நாளை திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US