பாபா வாங்கா கணிப்புப்படி 2025-ல் அதிரடி திருப்பம் பெறப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
பாபா வாங்கா மிக சிறந்த தீர்க்கத்தரசி. இவர் எதிர்காலத்தை கணித்து சொல்வதில் மிகவும் வல்லமை பெற்றவர். இவர் கணித்த நிறைய விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடப்பதை நாம் பார்க்கமுடியும். இவர் உலக நடப்புகள் மட்டும் அல்லாமல் ஜோதிடத்திலும் சில கணிப்புகளை சிறப்பாக கணித்து சொன்னவர்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக, வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை சந்திக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுக்கு இந்த 2025ஆம் ஆண்டு மிக சிறந்த முன்னேற்றத்திற்கான ஆண்டாக அமையும் என்று சொல்கிறார். இவர்கள் இந்த ஆண்டில் என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை பெரிய பிரச்சனைகள் சந்தித்தாலும் இதுவும் கடந்து போகும் என்று எண்ண வேண்டும். நீங்கள் அறியாமல் வாழ்க்கை உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்கிறார்.
மிதுனம்:
இவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாகவும் இவர்களுக்கு வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொடுத்த ஆண்டாகவும் இருக்கும் என்கிறார். தனக்கு என்று தனி பாதை அமைத்து அதன் வழி சென்று வெற்றி அடைவீர்கள். வாழ்க்கையை பற்றிய நல்ல புரிதலால் மனதில் தெளிவும் மனதில் அன்பும் நிறையும் என்கிறார். பிறர் உங்களை புகழ்ந்து போற்றும் ஆண்டாக இருக்கும்.
ரிஷபம்:
இவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிக சிறந்த அதிர்ஷ்டமான ஆண்டாக அமைய உள்ளது. நினைத்த பல விஷயங்கள் நடக்கும் அற்புத ஆண்டாக இருக்கும். பல மறக்கமுடியாத நிகழ்வுகள் இந்த ஆண்டு இவர்களுக்கு நடக்க உள்ளது. வியாபாரத்தில் முதலீடுகள் செய்து நல்ல லாபத்தை பெரும் காலம் ஆகும். உங்களின் கடின உழைப்பை போடும் காலம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |