ஜோதிடம்: 12 ராசிகளுக்கும் துணையாக நிற்கும் கடவுள்கள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jul 03, 2025 09:10 AM GMT
Report

மேஷம்:

மேஷ ராசியினருக்கு எப்பொழுதும் துணை நின்று வழி நடந்தும் கடவுள் முருகப்பெருமான். இவர்கள் இவரைப் பற்றிக்கொண்டால் நன்மை நடக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு எப்பொழுதும் உறுதுணையாக நின்று பாதுகாக்கும் தெய்வம் மஹாலக்ஷ்மி ஆவார். இவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மஹாலக்ஷ்மியை வழிபாடு செய்வது வந்தால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மிதுனம்:

இவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள மன குழப்பங்கள் விலகி நல்வழியில் செல்ல புத்தர் அருள் புரிகிறார்.

கடகம்:

இவர்களுக்கு சிவப்பெருமானின் அருள் எப்பொழுதும் இருக்கும். சிவனை வழிபாடு செய்து வந்தால் இவர்களின் கஷ்டங்கள் யாவும் விலகும்.

சிம்மம்:

இவர்களுக்கு எப்பொழுதும் பிரகாசமான வாழ்வை வழங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர்கள் சூரிய வழிபாடு செய்து வந்தால் பெயரும் புகழோடும் வாழ்வார்கள்.

கன்னி:

இவர்கள் வாழ்க்கையை பல இன்னல்களில் இருந்து காக்கும் தெய்வமாக லட்சுமி தேவி இருக்கிறாள். இவர்கள் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வந்தால் நல்ல மாற்றம் பெறுவார்கள்.

துலாம்:

நீதிமானாக திகழும் துலாம் ராசியினரை காக்கும் தெய்வமாக கிருஷ்ணர் இருக்கிறார். இவர்கள் கிருஷ்ணரின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நெருங்குவதில்லை.

ஜூலை மாதம் அதிக அளவில் அதிர்ஷ்டமும் சந்தோஷமும் பெறப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?

ஜூலை மாதம் அதிக அளவில் அதிர்ஷ்டமும் சந்தோஷமும் பெறப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?

விருச்சிகம்:

இவர்களை வழிநடத்தும் தெய்வமாக ஹனுமன் இருக்கிறார். இவர்கள் ஹனுமன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வந்தால் ஆபத்துகளில் இருந்து இவர்களை காக்கிறார்.

தனுசு:

பல இன்னல்களில் இருந்து இவர்களை காப்பாற்றும் தெய்வமாக மகா விஷ்ணு இருக்கிறார். இவர்கள் தொடர்ந்து விஷ்ணு வழிபாடு செய்து வந்தால் மன அமைதி கிடைக்கும்.

மகரம்:

இவர்களை ஹனுமன் எப்பொழுதும் உடன் நின்று காப்பாற்றுகிறார். இவர்கள் ஹனுமன் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மன தைரியம் அதிகரிக்கும்.

கும்பம்:

இவர்களை காக்கும் தெய்வமாக மகா காளியும் சனி பகவானும் இருக்கிறார்கள். இந்த இரு தெய்வங்களையும் பற்றிக்கொண்டால் இவர்களுக்கு துன்பமே இல்லை.

மீனம்:

இவர்களை வழிநடத்தும் கடவுளாக குருபகவான் இருக்கிறார். இவர்கள் வியாழக்கிழமை அன்று குருபகவானை வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US