ஜூலை மாதம் அதிக அளவில் அதிர்ஷ்டமும் சந்தோஷமும் பெறப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் கிரகங்கள் அதனுடைய இடத்தை மாற்றுகிறது. இதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கங்கள் உண்டாகும். அப்படியாக, இந்த ஜூலை மாதத்தில் நடக்க இருக்கும் ஒரு சில கிரக பெயர்ச்சியால் வாழ்க்கையில் அதிக அளவில் அதிர்ஷ்டமும் சந்தோஷமும் பெறப்போகும் ராசிகள் யார் என்பதைப் பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் அவர்கள் வாழ்க்கையில் அதிக அளவிலான மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்றாலும் தேவை இல்லாமல் சிந்திப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும். மன அமைதிக்கும் நிம்மதிக்கும் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய காலமாக அமையப்போகிறது. மேலும், சுக்கிரனின் இடமற்றதால் இவர்களுக்கு காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமையப்போகிறது.
கடகம்:
கடக ராசிக்கு இந்த மாதம் மிக சிறந்த மாதமாக அமையப்போகிறது. சூரியன் இவர்கள் ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், வெற்றியையும் கொடுக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் கடக ராசியினரை சுற்றி உள்ள நட்புகளும், சொந்தங்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கப்போகிறார்கள். பொருளாதாரம் மற்றும் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையப் போகிறது.
சிம்மம்:
செவ்வாய் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் வாழ்க்கையில் பல திருப்பங்களும் அற்புதங்களும் நடக்க உள்ளது. சில விஷயங்கள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய கோபத்தை மட்டும் குறைத்து கொள்வது நன்மை தரும். தொழில், மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒரு சிறந்த மாற்றத்தை சந்திக்க போகிறீர்கள். உங்களுடைய கனவுகள் நினைவாகும் காலக்கட்டம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |