வாஸ்து: வீடுகளில் இந்த 5 இடங்களில் கல் உப்பை வைப்பதனால் நடக்கும் அதிசயம்
நம்முடைய இந்து மதத்தில் உப்பு மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. உப்பு சமையலுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. வாஸ்து ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உப்பு அதிக சக்தி நிறைந்தது.
அந்த வகையில் வீடுகளில் உப்பை சில இடங்களில் வைப்பதால் நமக்கு நேர்மறை ஆற்றலும் வீடுகளில் உள்ள வாஸ்து பிரச்சனையும் விலகுவதாக கூறப்படுகிறது. அப்படியாக, வீடுகளில் உப்பை எந்த இடங்களில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
1. உப்பிற்கு எப்பேர்ப்பட்ட தீய சக்திகளையும் விரட்டும் தன்மை உடையது. நம் வீடுகளில் ஏதேனும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பது போல் உணர்ந்தால் வீட்டை சுற்றி நான்கு மூலையிலும் ஒரு ஜாடி அல்லது கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி வைத்தால் வெகு விரைவில் நம் வீடுகளை சூழந்த தீய சக்திகள் விலகும்.
2. ஜோதிட சாஸ்திரப்படி உப்பிற்கு கிரகங்களால் கொடுக்கக்கூடிய பாதிப்புகளை குறைக்க கூடிய ஆற்றல் உடையது. அதிலும் குறிப்பாக யாருடைய ஜாதகத்தில் சனி, ராகு, கேது பாதிப்புகள் இருக்கிறதோ அவர்கள் வீடுகளில் தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் கல் உப்பை வைத்து வந்தால் கிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக குறைவதை நாம் பார்க்கமுடியும்.
3. மனிதனுக்கு அவனின் வீடு தான், அவன் எப்படிப்பட்ட மனிதனாக உருவாகுகின்றான் என்பதை தீர்மானிக்க கூடிய இடம் ஆகும். அப்படியாக, அந்த வீடு நல்ல ஆற்றல் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும்.
ஆதலால் தினமும் இரவு உறங்கும் பொழுது நம் தலைக்கு அடியில் ஒரு ஜாடியில் உப்பு வைத்து உறங்கி வந்தால் நல்ல உறக்கம் பெறுவதோடு, நம்முடைய மன அழுத்தம் படிப்படியாக குறைந்து மனதில் நேர்மறை ஆற்றல் பெருகி உற்சாகம் உண்டாகும்.
4. பொதுவாக உப்பிற்கு வாஸ்துவால் உண்டாகும் நிலையற்ற தன்மையை சமமாக்கும் ஆற்றல் உண்டு. ஆதலால் நாம் தியானம் செய்யும் இடங்களில் அல்லது படிக்கும் அறை, அலுவலகம் போன்ற இடங்களில் கல் உப்பை வைப்பதால் அங்கு நல்ல அதிர்வலைகள் உருவாகி மனதை சமநிலை அடைய செய்கிறது.
5. நம் வீடுகளில் கல் உப்பை வடக்கு கிழக்கு திசையில் வைத்து வந்தால் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். அதுவே வீடுகளில் தென் கிழக்கு திசையில் வைத்து வந்தால் ஆரோக்கியம் சீராகவும், பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக அமையும். மேலும், இவ்வாறு வைப்பதனால் நமக்கு ஏற்பட்டு உள்ள கண் திருஷ்டி பாதிப்புகளும் விலகுகிறது.
குறிப்பாக நாம் வைக்கும் உப்பை 7 முதல் 15 நாட்களில் மாற்றுவது நன்மை தரும். அதோடு, பழைய உப்பை நாம் ஒரு பொழுதும் குப்பைகளில் போடக்கூடாது. அதை தண்ணீரில் கரைப்பதே நல்லது.
நாம் கல் உப்பை முடிந்த அளவு கண்ணாடி ஜாடி அல்லது, செம்பு போன்ற பாத்திரங்களில் வைப்பதே உகந்தது. பிளாஸ்டிக் அல்லது மெட்டல் போன்ற பாத்திரங்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். காரணம் அவை எதிர்மறை சக்திகளை ஈர்க்க கூடியது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |