நம்முடைய ஜோதிடத்தில் அமாவாசையில் பிறப்பவர்களுக்கு சில சிக்கல்களை சந்திப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக, அமாவாசையில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி அமையும் என்று பார்ப்போம்.
பிரபஞ்ச ஒளி சக்தியான சூரியனும் சந்திரனும் ராசிக்கட்டத்தில் ஒரே இடத்தில் இணையும் நாள் அமாவாசை எனப்படும். இதில் அமாவாசை ஆன்மீக ரீதியாக மிக சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தான் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்கின்றோம்.
அந்த வகையில் நம்முடைய ஜோதிடத்தில் தாய் உறவை குறிக்கும் சந்திரனும், தந்தை உறவை குறிக்கும் சூரியனும் ஒரே ராசி கட்டத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கை மிகுந்த போராட்டம் கொண்ட வாழ்க்கையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அது உண்மைதானா என்று பார்ப்போம்.
பொதுவாக, ஒரு தனிமனித ஜாதகத்தில் அடித்தளம் என்று கூறப்படும் தாய் மற்றும் தந்தை உறவுகளை குறிக்கக்கூடிய கிரகங்களின் அமர்வு பொருத்துதான் அந்த ஜாதகரின் வாழ்நாள் அமையும் என்று சொல்லப்படுகிறது. மேலும், அமாவாசை கிரகங்கள் சூரியன் சந்திரன் இணைவு சூரியன் உச்சமாக கூடிய மேஷ ராசியில், சந்திரன் உச்சம் ஆகக்கூடிய ரிஷப ராசியில் இருந்தால் சிறப்பு.
அதே போல், சந்திரனின் சொந்த வீடு என்று சொல்லப்படக்கூடிய கடகத்திலும், சூரியனின் சொந்த வீடான சிம்மத்திலும், சூரியன் நீசம் ஆகக்கூடிய துலாம் ராசியிலும் இந்த இணைவு இருப்பது சிறப்பு என்று ஜோதிட விதிகள் கூறுகின்றன.
ஆனால், மற்ற இடங்களில் இந்த இணைவு இருப்பது அவ்வளவு சிறப்பானதாக கருதுவதில்லை. அதுபோலவே, தாயையும் தந்தையும் குறிக்கக்கூடிய இந்த சூரியன் சந்திரன் இணைவு லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களில் அமைய பெற்று இருந்தாலும், அந்த ஜாதகர் சில போராட்டங்களை சந்திப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
அதாவது லக்கின பாவத்துக்கு 6 மற்றும் 8 மற்றும் 12ஆம் பாவகங்களில் அம்மாவாசை கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. அதே போல் அமாவாசையில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான எதிர்மறை எண்ணங்கள் இருக்கும் என்றும் அவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் பொதுவான கருத்துக்கள் இருக்கிறது.
அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அமாவாசை கிரகங்களான மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் விருச்சிகம் இருக்கும்பொழுது காதல் உயிர் காரகத்துவம் ஜாதகருக்கு முழுவதுமாக கிடைக்கும். ஆனால், எந்த நிலையிலும் அமாவாசை கிரகங்கள் சனி ராகு சேர்க்கையில் இருக்கக்கூடாது.
அதே போல் அமாவாசையில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் தாய் தந்தையின் உறவுகள் இடையே பாதிப்புகள் உண்டாகும் என்று எடுத்து கொள்வதும் தேவை இல்லை. அந்த கிரகங்கள் அமைந்த இடம், அவை பார்க்கும் இடம் பொருத்தும் தான் பலன்கள் அமையும்.
ஆதலால், அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை முற்றிலுமாக துன்பம் மிகுந்ததாக இருக்கும் என்பது ஏற்பத்தக்கது அல்ல.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |