கிருஷ்ணர் உபதேசம்: வெற்றிகரமான வாழ்க்கை எப்பொழுது அமையும்?

By Sakthi Raj Aug 20, 2026 04:34 AM GMT
Report

கிருஷ்ண பகவான் ஒவ்வொரு மனிதனுடைய நண்பனாகவும் ஒவ்வொரு மனிதனுடைய வழிகாட்டுதலாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில். கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதை காலம் முழுவதும் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு ஒரு துணையாக அமைகிறது.

மேலும், பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தேடுதலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கின்றோம். அதில் ஒரு சிலருக்கு அவர்கள் தேடியது கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் தேடியதற்கான விடையே இல்லாமல் போகின்றது.

கிருஷ்ணர் உபதேசம்: வெற்றிகரமான வாழ்க்கை எப்பொழுது அமையும்? | Bagavad Gita Krishnas Teachings For A Better Life

உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்

உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்

அப்படியாக, நாம் எப்படி வாழ்ந்தால் நம்முடைய தேடுதலுக்கான விடை கிடைக்கும்? நம்முடைய தேடுதல் எப்போது அர்த்தமுள்ளதாக மாறும் என்பதை பற்றி பார்ப்போம். அதாவது நோக்கம் இல்லாமல் ஒரு வேலையை செய்யும் பொழுது அந்த இடத்தில் நமக்கு சோர்வு உண்டாகிறது.

நாம் நோக்கத்துடன் செய்யக்கூடிய வேலை நமக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கிறது. ஆதலால், நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் வேண்டும். அப்பொழுது தான் செய்கின்ற காரியம் உங்களுக்கு மன திருப்தியை கொடுக்கும்.

அதைப்போல், வெற்றி என்பது உடனடியாக வரக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் அல்ல. தெளிவான நல்ல நோக்கத்துடனும், திட்டம் மற்றும் தொடர் முயற்சியுடன் நாம் பற்றி கொள்ளக்கூடியதாகும். ஆக, நோக்கம் இருக்க வேண்டும். விடாமுயற்சி இருக்க வேண்டும்.

கிருஷ்ணர் உபதேசம்: வெற்றிகரமான வாழ்க்கை எப்பொழுது அமையும்? | Bagavad Gita Krishnas Teachings For A Better Life

12 ராசிகள் படி உங்களுடைய திருமணத்தை எந்த உறவு முடிவு செய்வார்கள் தெரியுமா?

12 ராசிகள் படி உங்களுடைய திருமணத்தை எந்த உறவு முடிவு செய்வார்கள் தெரியுமா?

அப்பொழுதுதான் வாழ்க்கை அழகாகும். நோக்கமே இல்லாமல் வாழ்கின்ற பொழுது வாழ்க்கை அர்த்தமற்றதாகும். நோக்கம் இல்லாமல் வாழும் பொழுது நம்முடைய மனமும் சோர்வடைந்து விடும். மீண்டும் எழுந்து போராடுவதற்கான ஒரு ஆற்றல் பிறப்பதில்லை.

ஆக, தினமும் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வோம். இறை அருளால் வாழ்க்கையின் சரியான நோக்கத்தை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து வெற்றி பெற அவருடைய முழு அருளையும் பெறுவோம்.

"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US