பகவத் கீதை: முடிவெடுப்பதில் குழப்பமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
மனிதர்களுக்கு பல நேரங்களில் பலவகையான குழப்பங்கள் உண்டாகும். அதாவது ஒரு விஷயத்தை நோக்கி முடிவெடுக்கும் பொழுது மனம் அதை சரி என்று சொல்லும். ஆனால் மூளையோ அது தவறு என்று நமக்கு எடுத்து வைக்கும்.
அப்படியாக இவ்வாறான நேரத்தில் நாம் எடுக்கக்கூடிய முடிவு சரியானதா அல்லது தவறானதா என்று எவ்வாறு கணிப்பது என்பதை பற்றி பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு எடுத்துச் சொல்கிறார். அதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
பகவத் கீதை போர் என்று தொடக்கத்தில் அது ஆரம்பிக்கவில்லை. பகவத் கீதையில் நிறைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் கடந்து தான் போர் என்று ஒரு நிலை நடக்கிறது. அந்த வேளையில் அர்ஜுனனுக்கும் நாம் எடுக்கக்கூடிய முடிவு சரியானதா நாம் செல்லக்கூடிய பாதை சரியான பாதையா என்று குழப்பத்தை கிடைக்கவேண்டிய நிலை வந்து இருக்கிறது.

ஆக வாழ்க்கையில் எல்லோருக்கும் இவ்வாறான ஒரு நிலை கட்டாயம் வந்திருக்கும். சில நேரங்களில் நாம் ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது நம்மை கடந்து இந்த பிரபஞ்சம் அந்த முடிவை எடுப்பதற்கான ஒரு பாதையை நோக்கி நம்மை தள்ளும். இதை நம்முடைய கர்ம வினையின் ஒரு தூண்டுதல் என்று கூட சொல்லலாம்.
அவ்வாறான வேளையில் நம்முடைய மனதிற்கு நாம் செய்வது தவறு என்று தெரிந்தாலும் இந்த கர்ம வினை ஆனது அந்த தவறையோ அல்லது அந்த சரியான ஒரு விஷயத்தை செய்வதற்கான ஒரு ஊந்துதலை கொடுத்து அதை செயல்படுத்தி அதற்கான பலனை நம்மை அனுபவிக்க செய்து விடும். இதுதான் இந்த பிரபஞ்சத்தினுடைய ஒரு வடிவமைப்பு.
ஆனால் என்னதான் நம்முடைய மனதிற்கும் நம்முடைய மூளைக்கும் சரி தவறு என்ற பல்வேறு இடைவேளைகள் இருந்தாலும் மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு போர் புரிவதில் விருப்பமே இல்லை. ஆனால் அன்றைய நேரத்தின் தர்மம் என்பது அவன் போர் புரிந்து அவனுடைய தர்மத்தை மீட்டெடுப்பது மட்டும் என்பது தான்.

அர்ஜுனனுக்கு அதில் அவ்வளவு மனக் கவலைகள் அவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் அவனுடைய மனதையும் அவனுடைய மூளையையும் தாண்டி அந்த நேரத்திற்குரிய தர்மத்தை அவன் கையில் எடுத்து செயல்பட கூடிய நிலையில் இருந்தான்.
இதைத்தான் நாமும் செய்ய வேண்டும் என்னதான் நம்முடைய மூளைக்கும் நம்முடைய மனதிற்கும் பல நேரங்களில் நம்மை சுகமான இடத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு முடிவை எடுக்கச் செய்தாலும் அதையும் தாண்டி தர்மம் என்ற ஒரு நிலையான ஒரு முடிவை நாம் எடுக்கும் பொழுது அவை நீண்ட காலத்திற்கு பயனளிக்க கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு நாம் சந்திக்கக்கூடிய துயரங்களில் இருந்து நம்மை காக்கக்கூடியதாகவும் அமையும்.
ஆக இன்று என்ற ஒரு தினத்தை மட்டும் நாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நாளை என்ற ஒரு தினத்தையும் நம் மனதில் வைத்து இன்றைய முடிவுகளை நாம் எடுக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கை மிகவும் இன்பமாக அமைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |