பகவத் கீதை: துன்ப காலங்களில் இந்த 3 விஷயங்களை செய்ய மறக்காதீர்கள்
மனிதன் வாழ்க்கையில் கட்டாயம் ஏதேனும் ஒரு சமயம் அவனுடைய வாழ்க்கை தலைகீழாக மாறி அவனுக்கு பல துன்பங்கள் கொடுப்பதை நாம் பார்க்க முடியும். அதாவது காலத்தின் மாற்றத்தால் நெருங்கியவர்களே அவனுக்கு எதிரியாக நின்று பல தவறான விஷயங்களை அவனைப் பற்றி சொல்லும் பொழுது அல்லது வாழ்க்கையில் அவன் செய்யாத தவறுக்கு அவன் தண்டனை அனுபவிக்கும் பொழுதும் அவன் மனம் உடைந்து செய்வதறியாது நிற்கும் வேளையில் அவனுக்கு இருக்கும் ஒரே துணை இறைவனாக தான் இருக்கும்.
அப்படியாக நம்முடைய கலியுகத்திலும் கிருஷ்ண பகவான் அருளிச்செய்த பகவத்கீதை நமக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலாகவும் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் அமைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. அதோடு வாழ்க்கை நம்மை ஒரு மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தும் பொழுது நாம், பகவத் கீதையின் இந்த ஒரு 3 மந்திரங்களை நம் மனதில் சொல்லிக் கொள்வதால் நம் மனம் வலிமை பெறுவதோடு அந்த துன்ப காலத்தையும் நாம் மிக எளிதாக இறைவனின் துணையால் கடந்து விடலாம்.
1. பகவத் கீதையில் எல்லா அத்தியாயங்களிலும் பகவான் கிருஷ்ணர் சொல்லக்கூடியது கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று மட்டும் தான். அதனால் இந்த பிரபஞ்சம் நமக்கு எப்பேர்ப்பட்ட துன்பத்தை வேண்டுமானாலும் கொடுத்து கொண்டே இருக்கட்டும் நாம் நம்முடைய கடமையை செய்வதிலிருந்து தவறாமல் இருந்து விட்டோம் என்றால் நம்மை யாராலும் அசைக்க முடியாது.
அப்படியாக, மன வலியோடு கடமையை செய்யும் நிலை சில நேரங்களில் நமக்கு வரும் பொழுது இந்த மந்திரங்களை சொல்லிக் கொள்ளுங்கள். பகவான் கிருஷ்ணர் உங்களுடனே இருந்து உங்களுக்கு நல்ல பாதையை காட்டுவார்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசன் |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி ||
2. இந்த உலகில் தர்மம் அதர்மத்திற்குமான போராட்டம் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்க முடியும். அப்படியாக சமயங்களில் அதர்மம் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மனம் தளராமல் சமநிலையோடு உங்கள் தர்மத்தை கடைப்பிடித்து பகவான் கிருஷ்ணர் மீது உங்களுடைய மனதை செலுத்தி தர்மம் ஜெயிக்கும் என்று அமைதியாகவும் நம்பிக்கையாகவும் இருந்தால் கட்டாயம் உங்களுடைய தர்மம் ஆனது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறும்.
மேலும் அதர்மத்திற்கு முன்பு நாம் தலைகுனிந்து நிற்கும் பொழுது செய்வதறியாவது மனம் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த மந்திரத்தை மனதில் சொல்லிக் கொள்ளுங்கள் பகவான் கிருஷ்ணர் உங்கள் அருகில் நின்று உங்களுடைய தர்மத்தின் நிலை நாட்டுவார் .
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத் |
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் சஜாம்யஹம் ||
3. மனிதனுடைய வாழ்க்கை இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என்று இரண்டு போராட்டங்களுக்கு இடையே இருந்தாலும் உண்மையில் இந்த போராட்டங்களில் வெற்றி தோல்வி என்பது இல்லை. எனவே இன்பமாக இருந்தாலும் சரி துன்பமாக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையை நாம் நினைத்தது போல் அல்லாமல் வேறு விதமாக சென்றாலும் சரி எதற்கும் மனதை தளர விடாமல் சமநிலையோடு இருங்கள்.
அவ்வாறு இருப்பது பற்றற்ற வாழ்க்கை அல்ல. இவ்வாறு இருப்பது பிரபஞ்சம் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நம்முடைய கடமையைச் செய்வதாகும். இதில் ஏதேனும் ஒரு விஷயங்களில் நாம் சிக்கிக் கொண்டோம் என்றால் நம் மனம் மிகப் பெரிய அளவில் துன்பத்திற்கு ஆளாக கூடும்.
மனம் நடக்காததை எண்ணி மிகவும் வருந்து கொண்டே இருக்கும். மேலும் இவ்வாறான செயலை நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது சற்று கடினம் தான். அப்பொழுது நீங்கள் பகவானுடைய இந்த மந்திரத்தை மனதில் சொல்லிக் கொள்ளுங்கள் எல்லாம் சரி ஆகி விடும்.
சுகது:கே ஸமே க்ருத்வா லாபலாபௌ ஜயஜயௌ |
ததோ யுத்தய யுஜ்யஸ்வ நைவன் பாபமவாப்ஸ்யஸி ||
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







