பகவத் கீதை: இதை செய்பவர்களுக்கு தோல்வியே கிடையாதாம்
நம்முடைய வாழ்க்கையில் பலரும் ஒரு விஷயத்தை அடைந்தால் வெற்றி ஒரு விஷயத்தை நாம் அடையா விட்டால் அது தோல்வி என்று நினைப்பது உண்டு. அப்படியாக, உண்மையில் இந்த உலகத்தில் வெற்றி தோல்வி என்ற ஒன்று இருக்கிறதா? என்பதை பற்றி பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன சொல்கிறார்? என்று பார்ப்போம்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் லட்சியம் என்ற ஒன்று இருக்கும். அந்த லட்சியத்தை அடைவதற்காக மனிதன் பல வழிகளில் பல முயற்சிகளை போடுகின்றான். சில நேரங்களில் அவன் போடும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கிறது. சில நேரங்களில் போடும் முயற்சிகளுக்கு எதிர்ப்பாராத பலன்களும் கிடைக்கிறது.
அப்படியாக நாம் எதிர்பார்த்த பலன் கிடைத்தது என்பதற்காக அதை நாம் வெற்றி என்றும் சொல்லிவிட முடியாது, நாம் எதிர்பாராத பலன் கிடைத்துவிட்டது என்பதனாலும் அதை தோல்வி என்று நாம் அறிவிக்க முடியாது. காரணம், நம்முடைய வேலை நம்முடைய செயல்களில் மட்டும்தான் இருக்க வேண்டும். அதில் பலனை எதிர்பார்க்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை.
அதற்காக நாம் செய்யும் செயலுக்கான பலன் கிடைக்கவில்லை என்பதற்காக ஒருவர் துரதிர்ஷ்டசாலிகள் என்பதும் இல்லை. நாம் அடைய வேண்டிய லட்சியங்களில் முழு மனதையும் இறைவனை மனதில் நிறுத்தி நம்முடைய கடமைகளை செய்து விட்டோம் என்றால் கட்டாயமாக இந்த பிரபஞ்சம் அதற்கான நல்ல பதிலை நமக்கு கொடுத்து விடும்.
சமயங்களில் நாம் லட்சியத்தை நோக்கிஓடி கொண்டு இருக்கும் பொழுது அந்த முயற்சியை கைவிடும் நிலை கூட வரலாம். ஆனால் எவர் ஒருவர் தான் எடுத்த முயற்சியை கைவிடாமல் தன்னுடைய புத்தி கூர்மையாலும் சரியான பாதையில் சென்றும் போராடுகிறார்களோ அவர்களுக்கு கட்டாயம் இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு துணை நின்று நினைத்ததை அடையச்செய்யும்.
இருப்பினும் சமயங்களில் லட்சியம் நிறைவேறாமல் போகலாம். அதற்காக துவண்டு போவது நம்முடைய ஆற்றலை குறைக்க கூடும். மனிதனாக பிறந்த நமக்கு செயல்கள் செய்வதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பலன் இறைவன் கொடுப்பதாகும். ஆனால் இறைவன் கொடுக்கும் பலன் என்னவாக இருந்தாலும் நம்முடைய கடமையை செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ண பகவான்.
அதோடு நாம் வாழும் வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. நாம் செய்யும் செயலுக்கான பலன் என்பது மட்டுமே இருக்கிறது. நாம் நம்முடைய செயல்களை முழுமூச்சாக செய்துவிட்டால் நமக்கு வரக்கூடிய பலன் என்னவாகஇருந்தாலும் நம்மை அவை கட்டாயம் எதிர்மறையாக தாக்கக் கூடியதாக இருக்காது.
மேலும், சில நேரங்களில் நமக்கான பாதை தவிர்த்து வேறு பாதையில் ஓடிக்கொண்டு இருப்போம். அதனால் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் இறைவன் நமக்கு வேறு ஒரு மகிழ்ச்சியான பாதையை வைத்திருப்பார் என்று நாம் நம்ப வேண்டும். கட்டாயமாக இந்த பிரபஞ்சம் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் நம் கைகளில் கொடுக்கும்.
அதை கொண்டு தான் நம்மை அலங்காரம் செய்து பார்க்கும். ஆதலால் கடமையை செய்வது மட்டுமே நம்முடைய வேலை. இந்த பிரபஞ்சம் அதனுடைய வேலையை செய்து நமக்கான வாழ்க்கையை நம்மிடம் கொடுத்துக் கொண்டிருக்கும்.
அதோடு இந்த பிரபஞ்சம் கொடுக்கும் எந்த ஒரு பலனாக இருந்தாலும் எவன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வாழ்கின்றானோ அவனே காலம் கடந்து நிலைத்து நிற்கின்றான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







