வீடுகளில் குபேர சிலையை வைப்பது நல்லதா? கெட்டதா?
குபேரன் என்பவர் செல்வத்திற்கு அதிபதியான கடவுளாக இருக்கிறார். ஆதலால் பலரும் வீடுகளில் குபேரனுடைய சிலைகளை வைப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் வாஸ்து ரீதியாக நம் வீடுகளில் குபேரன் சிலை வைக்கலாமா? கூடாதா? என்று பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கிறது.
அதாவது வாஸ்து ரீதியாக குபேரன் சிலை வீட்டில் வைத்தால் நமக்கு நன்மை அளிக்குமா? தீமை அளிக்குமா என்று பார்ப்போம்.
குபேரரை சிரிக்கும் புத்தர் என்றும் அழைப்பார்கள். இவர் மகிழ்ச்சியின் சின்னமாக இருக்கிறார். ஆதலால் வீட்டில் வைக்கப்படும் சிரிக்கும் புத்தர் சிலைகள் நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தேடி தருவதாக சொல்கிறார்கள்.
மேலும் வீடுகளில் குபேரர் சிலை இருந்தால் அவை நமக்கு நேர்மறை சக்திகளை பெற்றுக் கொடுக்கிறது. அதோடு குபேரர் சிலையை நம் வீடுகளில் வைப்பதால் வாஸ்து குறைபாடுகள் ஏதேனும் இருந்தாலும் விலகுகிறது. அதோடு கடன் சுமை குறைந்து காணப்படும் என்று நம்பப்படுகிறது.
மேலும், நமக்கு நேரம் சரி இல்லாத வேளையில் சிறிது நேரம் குபேரர் சிலையை பார்த்தால் நமக்கு மனதில் புன்னகை உண்டாகும். மேலும் வீடுகளில் குபேரர் சிலையை நம் வீடுகளில் கதவிற்கு பின்னால் வைப்பது நமக்கு அதிர்ஷ்டத்தை பெற்று கொடுக்கும்.
அதோடு வெளியே செல்லும் பொழுது அந்த சிலையை பார்த்து செல்வதற்கான நிலை உருவாகும் என்பதால் நாம் வெளியே சென்று செய்யும் காரியங்கள் வெற்றியிலும் மகிழ்ச்சிகளும் முடியும் என்பதும் நம்பிக்கை.
குறிப்பாக குபேரர் சிலையை தரையில் வைக்க கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள். அதை வேளையில் இருள் சூழ்ந்த இடங்களிலும் குபேரர் சிலை நாம் வைக்கக் கூடாது. ஒரு சிலர் வீடுகளில் குபேர சிலையை அலங்கார பொருட்களாக டிவி மற்றும் ஒரு சில மின்சார சாதன பெட்டிகளுக்கு மேல் வைப்பதை நாம் பார்க்க முடியும்.
அவ்வாறு வைப்பதும் கூடாது என்று சில வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள். அதேபோல் காலணிகள் கழட்டி வைக்கும் இடங்களிலும் நாம் குபேர சிலையை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







