திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இன்று முதல் கைபேசிக்கு தடை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மிகவும் முக்கியமான வீடாக இருக்கிறது. அப்படியாக, 2026 ஜூலை ஒன்றாம் தேதி முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் கைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்த கோவிலில் உள்ளே பக்தர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை தடை செய்ய உத்தரவு அதன்படி கடந்த 14. 11. 22 முதல் திருக்கோவிலுக்கு கைபேசி பயன்படுத்துவதற்கான தடை அமலில் உள்ளது.
தற்பொழுது நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில் ஜூலை 1 புதன்கிழமை முதல் கைபேசி பயன்படுத்துவதற்கான தடைகள் மிக தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த வகையில், பக்தர்கள் முழுமையாக பரிசோதனைக்குப் பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார் என்றும் கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தங்கள் கைபேசிகளை தாங்கள் தங்கி இருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்து விட்டு ஸ்வாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது,
அதைப்போல் கைபேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பிலும் ஆங்காங்கே கைபேசி வைப்பிடங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன,
அவற்றையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டால் அதனை உடனடியாக பறிமுதல் செய்து பாதுகாப்பாக பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்னும் என்றும் கோயில் நிர்வாகங்கள் செய்தி குறிப்பு தெரிவித்திருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |