நாளை (20-04-2025) அனைத்து தோஷங்களும் விலக பானு சப்தமி அன்று செய்யவேண்டியவை
சூரிய பகவான் நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை நீக்கி வளம் புரிபவர். அப்படியாக, பானு என்றால் சூரிய பகவான். சப்தமி என்பது சூரிய பகவானுக்கு உரிய திதி. நாளைய தினம் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி திதி சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்று கிழமையில் வருகிறது.
இவ்வாறு சூரியனுக்கு உகந்த திதி, கிழமை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் சூரிய பகவானை வழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அற்புத பலனை கொடுக்கிறது. அதாவது, நம் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க நாளை சூரிய பகவானை வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.
வேலை செய்யும் இடத்தில் சிக்கல், அல்லது வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லாமல் ஒரே இடத்தில் நிற்கின்றோம் என்று வருந்துபவர்கள் நாளை காலை 5.30 மணிக்கு மேல் சூரிய பகவான் வழிபாடு செய்வது அவர்கள் வாழ்க்கைக்கு நல்ல திருப்புமுனையாக அமையும்.
மேலும், சூரிய பகவானுக்கு உரிய கடவுள் என்றால் அது சிவபெருமான். அதனால், நாளைய தினம் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம். அதோடு சிவன் கோவிலில் இருக்கும் நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்றி, வெற்றிலை பாக்கு பூ பழம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்யலாம்.
கோயிலுக்கு போக முடியாத சூழலில் இருப்பவர்கள் வீட்டிலேயே கோதுமை மாவில் பிரசாதம் செய்து சூரிய பகவானை மனதார நினைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். இதைவிட மிக முக்கியமானதாக நாளை காலை சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
மேலும், சூரியனுக்கு உரிய பாடல் ஆதித்ய ஹிருதயம் ஆகும். அதை பாராயணம் செய்து வெற்றி கண்டவர்கள் பலர். அதனால் நாளைய தினம் கட்டாயம் ஒருமுறை ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். உங்களால் முடியும் என்றால் ஒரு முறை ஆதித்ய ஹிருதயம் படியுங்கள்.
மேலே சொன்ன இந்த சுலபமான வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்தாலே போதும். உங்களுக்கு அந்த ஈசனின் அருளும், சூரிய பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். மேலும், சிலர் வீடுகளில் முன்னோர்களுக்கு சரியான முறையில் திதி கொடுக்காமல் விட்டு இருப்பார்கள் அதனால் அவர்கள் முன்னோர்கள் சாபம் ஏற்பட்டு இருக்கும்.
அவர்கள் நாளை சூரிய பகவான் முன்பு ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் முற்றிலுமாக விலகி அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது.
ஆக, இவ்வளவு அற்புதம் வாய்ந்த மற்றும் அதீத சக்தி கொண்ட பானு சப்தமி தினத்தில் காலை 5.30 மணிக்கு மேலாக, கிடைத்த நேரத்தில் சூரிய பகவானை மறக்காமல் வழிபாடு செய்து நம் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |